இரண்டு அவித்த முட்டை 1700 ரூபாயா.. ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்.. வேதனை டுவிட்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Boiled egg Rs.1700 | ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்- வீடியோ

    மும்பை: மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் இரண்டு அவித்த முட்டைகளை வாங்கிய வாடிக்கையாளருக்கு ரூ.1700 கட்டணம் வசூலித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை ஓர்லியில் உள்ள போர் சீசன்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலுக்கு கார்த்திக் தார் என்பவர் அண்மையில் சென்றுள்ளார். அந்த ஓட்டலில் இரண்டு அவித்த முட்டைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஓட்டல் நிர்வாகம் கொடுத்த பில்லை பார்த்து கார்த்தி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இரண்டு அவித்த முட்டையின் விலை ரூ.1700 என இருந்தது. இதை பார்த்து தலை சுற்றி கீழே விழுகாத குறைக்கு மாறிய கார்த்தி தார், டுவிட்டரில் இது பற்றி தெரிவித்துள்ளார்.

    mumbai hotel asked rs 1700 bill for two boiled egg

    ஆனல் தி குயின்ஸ் மென்ஸ் என்ற புத்தகத்தை எழுதிய கார்த்திக் தார், இரண்டு ஆம்லேட்டுக்கும் ரூ.1700 தான் கட்டணம் வசூலித்தார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் முட்டை போட்ட கோழி பணக்கார குடும்பத்து கோழியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

    இந்த டுவிட்டை பார்த்த பலரும் ஓட்டல் நிர்வாகத்தின் செயலை கடுமையாக கண்டித்து பதிவிட்டுள்ளார்கள். ஆனால் ஓட்டல் நிர்வாகம் இதுவரை இதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. முன்னதாக சண்டிகரில் ஒரு ஓட்டல் நிர்வாகம் இதேபோல் தான் நடிகர் ராகுல் போஸ் என்பவருக்கு இரண்டு வாழை பழத்துக்கு ரூ.442 வசூலித்து சர்ச்சையில் சிக்கியது. அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+