வருவாய் 7.5 கோடி! செலவோ 529 கோடி! மும்பை மோனோ ரயிலால் நஷ்டம்! ஜெயலலிதா அறிவித்தாரே அந்த திட்டம்தான்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரு காலத்தில் மும்பையின் கனவுத் திட்டமாகப் பார்க்கப்பட்ட மோனோ ரயில் திட்டமே, இப்போது மும்பை மாநகராட்சிக்கு மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் டிராபிக் என்பது தான் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. மக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைப்பதே டிராபிக் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை தரும் என்பது அனைவருக்கும் தெரியும்.

 Mumbai Monorail a failed story that has become burden for govt

இதனால் நாட்டின் டாப் நகரங்கள் அனைத்தும் மெட்ரோ பக்கம் திரும்பியுள்ளன. மெட்ரோ ரயிலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைப்பதே இதற்குக் காரணமாகும். அதேநேரம் நமது நாட்டில் மும்பையில் இப்போது மோனோ ரயில் இருக்கிறது.

மோனோ ரயில்: இந்த மோனோ ரயிலைத் தான் சென்னைக்குக் கொண்டு வருவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன் பிறகு பல காரணங்களால் மோனோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது மும்பையில் இந்த மோனோ ரயில் திட்டம் இயங்கி வரும் நிலையில், அதன் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். மும்பையில் இயங்கி வரும் மோனோ ரயில் இந்த ஆண்டு மட்டும் ₹529 கோடி நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனோ ரயில் மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அங்கே 2022-23ல் ₹255 கோடி நஷ்டத்தை மோனோ ரயில் ஏற்படுத்தியுள்ளது. வருவாய் என்று பார்க்கும் போது கடந்தாண்டு மோனோ ரயில் வெறும் ₹7.50 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. அதேநேரம் 2023-24 நிதியாண்டில் வருவாய் ₹13.64 கோடியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதுவும் கூட ஆகும் செலவில் 10% கூட இல்லை..

529 கோடி நஷ்டம்: மும்பையில் மோனோ ரயில் இப்போது 10 ரேக்குகளுடன் ஒரு நாளைக்கு 200 சேவைகளை வழங்குகிறது. இருப்பினும், இதில் தினசரி 9,000-10,000 பயணிகள் மட்டுமே பயணிக்கிறார்கள். இதனால் இந்த நிதியாண்டிலும் மோனோ ரயிலால் ₹529 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்தளவுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் கூட மோனோ ரயில் நிர்வாகம் 10 புதிய மோனோ ரயில் ரேக்குகளை வாங்கி, ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறதாம்.

இருப்பினும், மோனோ ரயில் மிகப் பெரிய நிதிச்சுமையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னரே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 20 கிமீ நீளமுள்ள மும்பையின் மோனோ ரயில் ஒரு காலத்தில் ஐக்கானிக் திட்டமாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், இப்போது அதே திட்டம் மும்பை மாநகராட்சிக்குக் கடந்த நிதியாண்டில் ₹255 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் குறைவு: கடந்த 2022-23 நிதியாண்டில் ₹26.90 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், வெறும் ₹7.50 கோடி மட்டுமே வருவாயாக வந்துள்ளது. ஆனால், இதன் செலவுகளோ 255 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இந்தாண்டு 10 புதிய ரேக்குகளையும் வாங்க அவர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், அதையும் வாங்கினால் செலவு ₹542 கோடியாக உயரும்.. மோனோ ரயில் இப்போது நிதிச்சுமையாக மாறியுள்ளதால், இத்திட்டத்திற்கு அரசு உடனடியாக ஒப்புதல் தரவில்லை. ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்க உள்ளனர்.

மும்பையில் கடந்த 2014ஆம் ஆண்டில் முதலில் மோனோ ரயில் சேவையைத் தொடங்கியது. இருப்பினும், தொடக்கம் முதலே மோனோ ரயிலால் பயணிகளை ஈர்க்க முடியவில்லை. இதனால் மோனோ ரயில் ஒரு தோல்விகரமான திட்டம் என்பதை அம்மாநில அரசே ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ: மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயிலும் கூட லாபகரமாக இருப்பதில்லை. அவையும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இருப்பினும், மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருவதால், ஒரு காலத்தில் அது லாபத்தை நிச்சயம் சம்பாதிக்கும் என்கிறார்கள். அதேநேரம் மோனோ ரயில் பயணிகளை ஈர்க்க தவறுவதே அதில் உள்ள பிரச்சினையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+