அங்கே 3 பேர் இருந்தனர்.. சுஷாந்த் சிங் தற்கொலையின் போது என்ன நடந்தது? மும்பை போலீஸ் பரபரப்பு தகவல்!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீஸ் முக்கியமான விவரங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறது.
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீஸ் முக்கியமான விவரங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது மும்பை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் தற்கொலைக்கு இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை. இந்த தற்கொலை வழக்கை தற்போது மும்பை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

சிகிச்சை செய்தார்
இது தொடர்பாக தற்போது மும்பை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. அதில், சுஷாந்த் சிங் தன்னுடைய மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம். அவர் மரணத்தை தற்கொலை என்றுதான் பதிவு செய்து இருக்கிறோம். அவர் கடந்த 6 மாதமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார்.

போலீஸ் தகவல்
அவரின் உடலை தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். இதன் முடிவுகள் முழுமையாக வந்த பின்தான் எதையும் சொல்ல முடியும். அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். எது அவரை தற்கொலைக்கு தூண்டியது என்று விசாரித்து வருகிறோம்.

எங்கே இருந்தார்
சுஷாந்த் சிங் வீடு 7வது மாடியில் இருந்துள்ளது. பந்த்ரா கார்டர் பகுதியில் அவர் வீடு இருக்கிறது. அவர் தற்கொலை செய்து கொண்ட சமயம் அங்கே 3 பேர் இருந்துள்ளனர். வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் இருவர், ஒரு ஆர்ட் டிசைனர் இருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் இல்லை.

பொய்யான தகவல்
ஆனாலும் அனைத்தையும் விசாரிக்க வேண்டியது எங்கள் கடமை. அவர் காலையில் இருந்து படுக்கையில் இருந்து எழுந்திரிக்கவே இல்லை என்று கூறுகிறார்கள். அது பொய்யான தகவல். அவர் படுக்கையைவிட்டு எழுந்துள்ளார் . அதிகாலை அவர் எழுந்து உள்ளார். வீட்டில் சில நிமிடங்கள் டிவி பார்த்தவர் பின் ஜூஸ் குடித்து இருக்கிறார். வேலை காரர்களிடம் ஜூஸ் வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்துள்ளார்.

உள்ளே சென்று தற்கொலை
அதன்பின் காலை 10 மணிக்கு தூங்க செல்கிறேன் என்று கூறிவிட்டு தூங்க சென்றுள்ளார். 1.30 மணிக்கு அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பின்பே அவரின் நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் அவர் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் இதுவரை சந்தேகத்திற்கு இடமாக எதுவும் கிடைக்கவில்லை, என்று மும்பை போலீஸ் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications