மும்பையில் வெடித்த கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்! பாலிவுட் பிரபலம் இம்ரான் கான் உட்பட 400 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் போராட்டத்தை அறிவித்திருந்தது. இருப்பினும், போராட்டத்திற்கு முன்பே அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக மும்பையிலும் போராட்டம் வெடித்த நிலையில், ஆர்ப்பாட்டங்களில் நடிகர் இம்ரான் கான் உட்பட 400க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கரப்பான் பூச்சி கட்சியும் டெல்லியில் போராட்டத்தை அறிவித்திருந்தது. இருப்பினும், போராட்டத்திற்கு முன்பு விமானத்தில் வைத்தே அதன் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Mumbai Protest Bollywood Actor Imran Khan

இம்ரான் கான் கைது

இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் மெல்ல நாடு முழுக்க பர ஆரம்பித்துள்ளது. கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக மும்பையிலும் போராட்டம் வெடித்தது. இந்த ஆர்ப்பாட்டங்களில் நடிகர் இம்ரான் கான் உட்பட 400க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், ஆகஸ்ட் கிராந்தி மைதானம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

முன்னதாக, ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனான துஷார் காந்தி தலைமையிலான 'ஹம் பாரத் கே லோக்' அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஆதரவாளர்களும் கைதாகியுள்ளனர்.. டெல்லியில் நடைபெறும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

மும்பையில் வெடித்த போராட்டம்

தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினரும் தெற்கு மும்பையின் ஹுதாத்மா சவுக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற ரூபைத் போஜானி, போராட்டக்காரர்களை போலீசார் மிகவும் கடுமையாகக் கையாண்டதாக குற்றம்சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் பிரதமருக்கு வாக்களித்தோம். ஆனால், அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்தார்.

துஷார் காந்தி

முன்னதாக, துஷார் காந்தி பாந்த்ரா பகுதியில் இருந்து அழைத்து செல்லப்பட்டு டிஎன் நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். இதையடுத்து அந்தக் காவல் நிலையத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர். சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சித் தலைவர் ஆதித்ய தாக்கரேவும் அங்கு சென்றார். துஷார் காந்தி தனது 'ஹம் பாரத் கே லோக்' அமைப்பின் சார்பில், பிற்பகல் 3.30 மணிக்கு ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் நடவடிக்கை

கரப்பான் பூச்சி கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில், தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மும்பையின் மற்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் கிராந்தி மைதானம் போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் அல்ல என்று மும்பை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் போலீசார், அதன் அடிப்படையிலேயே கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+