நரம்பை வெட்டி பயங்கரம்.. தூங்கி கொண்டிருந்த கணவனை கொன்று.. 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவி
கணவனை கொன்று 7வது மாடியில் இருந்து வீசிய மனைவி கைதானார்
மும்பை: தூங்கி கொண்டிருந்த கணவனை கொலை செய்து, 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார் மனைவி.. இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பை அந்தேரி மேற்குப் பகுதியில் வசித்துவந்தவர் சந்தான கிருஷ்ணன் சாஸ்திரி.. 53 வயதாகிறது.. இவர் சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பெய்ர கீதா.. இவர்களுக்கு அர்விந்த் என்ற மகன் இருக்கிறார்.. 26 வயதாகிறது.. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இவர்கள் அனைவரும் வசித்து வந்தனர்.. 2 வருடங்களுக்கு முன்பு என்ஜினியரிங் படித்து முடித்தார் அரவிந்த்.

கனடா
எனவே, வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்பினார்.. கனடாவுக்கு செல்ல முடிவு செய்த அரவிந்த், இதற்காக பணம் வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுள்ளார்.. கீதாவும் மகனுக்கு சப்போர்ட் செய்து பணம் தரும்படி கேட்டார்.. ஆனால் சென்னையிலிருந்து 2 வருடத்துக்கு முன்புதான் டிரான்ஸ்பர் ஆகி வந்ததால், பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்.. இதனால் தகராறு வெடித்தது.. ஆத்திரமடைந்த கீதாவும், மகனும், சாஸ்திரியை கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தனர்..

சடலம்
அதனால் அன்றைய தினம் தூங்கி கொண்டிருந்த சாஸ்திரியை கொன்றுவிட்டனர். பிறகு சடலத்தை தூக்கிவந்து, 7-வது மாடியிலிருந்து கீழே வீசிவிட்டார்கள்.. மாடியில் இருந்து சாஸ்திரி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் போட்டனர்.. கீதாவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து இதை சொல்லவும், போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். முதல் விசாரணையே கீதாதான்.. முன்னுக்கு பின் முரணாக பேச ஆரம்பித்து, அவராகவே சிக்கி கொண்டார்..

அரவிந்த்
இதையடுத்து, கீதாவையும், அரவிந்தையும் போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்... அப்போது இருவருமே சேர்ந்து வாக்குமூலம் தந்தனர். இந்த வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரி அப்துல் ஷேக் சொல்லும்போது, "விடிகாலை 4 மணிக்கு இந்த கொலை நடந்துள்ளது.. அம்மாவும் மகனும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த சாஸ்திரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்..

மரக்கட்டை
தலையை பிடித்து கட்டிலில் மோதியுள்ளனர்.. பிறகு ஒரு மரக்கட்டையால் தலையை பல முறை ஓங்கி அடித்திருக்கிறார்கள்.. அதற்கு பிறகு, கையில் இருந்த நரம்பை வெட்டி உள்ளனர்.. இதை எப்படி தற்கொலையாக மாற்றுவது என்று யோசித்தனர்.. ஆனால், உடம்பெல்லாம் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழியவும், வேறு வழியில்லாமல் 7-வது மாடியிலிருந்து கீழே தூக்கிப்போட்டுள்ளனர்..

ரத்தக்கறை
பிறகு தரையில் சிந்திய ரத்தக்கரையை துணியால் துடைத்து, அதை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டனர்.. ரத்தம் தோய்ந்த அந்த சட்டையை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்.. சாஸ்திரி கீழே விழுந்து கிடப்பதை பார்த்த அந்த அபார்ட்மென்ட் செக்யூரிட்டிதான் போலீஸாருக்கு தகவல் தந்தார். ஆனால் எங்களிடம் கீதா வேறு மாதிரியாக சொன்னார்.

படுக்கை விரிப்புகள்
அவர்கள் தூங்கி கொண்டிருந்தபோது, சாஸ்திரியே மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார் ஏன்றார்கள்.. கையில் காயங்கள் இருக்கிறதே என்று கேட்டோம்.. அதற்கு கையை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொன்னார்கள்.. அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, படுக்கை விரிப்புகள் கலைந்து கிடந்தது.. இதுதான் எங்களுக்கு கிடைத்த முதல் துப்பு.. இப்போது தாயும், மகனும் மாட்டிக் கொண்டனர்.. விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications