ஹாய் டியர்! நிர்வாண வீடியோ கால் செய்த மும்பை அழகி.. 2 முதியவர்களை மிரட்டி ரூ 3 லட்சம் பணம் பறிப்பு!
மும்பை: நிர்வாண வீடியோ கால் செய்து இரு முதியவர்களிடம் ரூ 3 லட்சம் பறித்த இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.
மும்பை அந்தேரியை சேர்ந்தவர் 86 வயது முதியவர். இவருக்கு 28 ஆம் தேதி புதிய எண்ணிலிருந்து வீடியோ கால் வந்தது. உடனே அந்த முதியவர், யாரென பார்க்க நினைத்து வீடியோ காலை அட்டென்ட் செய்து பேசினார்.
அந்த வீடியோ காலில் பெண் ஒருவர் நிர்வாணமாக காட்சியளித்தபடி பேசினார். அப்போது அந்த முதியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வீடியோ காலை அந்த பெண் பதிவு செய்து கொண்டார்.

முதியவர்
இதையடுத்து அந்த முதியவருக்கு அந்த பெண் சாதாரண காலில் வந்தார். அப்போது அவரிடம் நான் நிர்வாணமாக இருக்கும் போது நீங்கள் என்னுடன் பேசியதை பதிவு செய்துக் கொண்டேன். பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

2.99 லட்சம்
இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ 3 லட்சம் தர வேண்டும் என அந்த முதியவரிடம் அந்த பெண் கூறியுள்ளார். முதியவரும் தனது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவருடைய சேமிப்பிலிருந்து இரு வங்கிக் கணக்கிலிருந்து 2.99 லட்சத்தை அந்த பெண் சொன்ன வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

போலீஸ்
இதையடுத்து முதியவர் அம்போலி போலீஸில் புகார் செய்தார். பிறகு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த மற்றொரு முதியவருக்கும் இளம் பெண் ஒருவர் நிர்வாண வீடியோ கால் செய்தார். முதியவர் போனை எடுத்துப் பேசிய போது அந்த வீடியோவை ரெக்கார்டு செய்து கொண்டார்.

பணம் கேட்டு மிரட்டல்
இதையடுத்து அந்த முதியவரையும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் இணையத்தில் வீடியோவை விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த முதியவரும் 64 ரூபாயை ஆன்லைன் மணி டிரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அந்த முதியவரும் போலீஸில் புகார் செய்தார்.

பண மோசடி
இரு முதியவர்களையும் ஏமாற்றி பண மோசடி ஒரே பெண் தானா இல்லை வேறு ஒரு பெண்ணா என போலீஸார் விசாரணை வருகிறார்கள். இது போன்ற மோசடிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். அந்த வங்கிக் கணக்குகளை வைத்து அந்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications