"ஆபாச புல்லிபாய்".. இஸ்லாமிய பெண்கள் விற்பனைக்கு.. கொந்தளித்த கட்சிகள்.. ஆப்கள் முடக்கம்
பெண்கள் போட்டோவை ஆபாசமாக பதிவிட்ட ஆப்கள் முடக்கப்பட்டுள்ளன
மும்பை: இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்டதாக புகார் கூறப்பட்ட புல்லி பாய் செயலி முடக்கப்பட்டுள்ளது...
Recommended Video
சமீப காலமாக பெண்களின் புகைப்படங்களை குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் போட்டோக்களை வைத்து அவதூறு செய்யப்படுவதாக புகார் எழுந்தபடியே உள்ளன..
அப்பெண்களை அவதூறு செய்யும் வகையில், அவர்களது போட்டோக்களை அவர்களுக்கு தெரியாமலேயே பதிவிடும் விசேஷ ஆப்கள்தான் புல்லிபாய், சல்லிடீல்ஸ் போன்றவைகள்.

இஸ்லாமிய சமுதாயம்
இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்து இந்த சட்டவிரோத தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சுல்லி டீல்ஸ் என்ற செயலியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் போட்டோக்கள் வெளியிடப்பட்டு அவர்கள் விற்பனைக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. இதில் பயன்படுத்தப்பட்டிருந்த போட்டோக்கள் அப்பெண்களின் ட்விட்டர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன.. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் அந்த செயலி அப்போதே முடக்கப்பட்டுவிட்டது.

புகார்கள்
ஆனால், இப்போது புல்லி பாய் என்ற இன்னொரு ஆப்பில் இஸ்லாமிய பெண்களின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் வெடித்துள்ளன.. இந்த ஆப், செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர் பகிர்வு தளமான கிட் ஹப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதில், சில பெண்களின் போட்டோவை பதிவிட்டு "டீல் ஆஃப்தி டே" Deal of the Day என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பிரியங்கா சதுர்வேதி
இந்த பிரச்சனையை சிவசேனா கையில் எடுத்துள்ளது.. அக்கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி இதுகுறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.. அதில், "பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தான் பலமுறை கேட்டுக் கொண்டும் அதற்கு பலனில்லை.. மும்பை போலீஸ் கமிஷனர், டிசிபி குற்றவியல் ரஷ்மி கரன்திகார் போன்றோரிடம் குறிப்பிட்ட சமூக பெண்களை ஏலம் விடும் ஆப்கள் குறித்து பேசினேன்..

வெப்சைட்கள்
அவர்களும் இதுகுறித்து விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்கள். பாலியல் மற்றும் பெண் வெறுப்பு வெப்சைட்களை நடத்துவோர் கைது செய்யப்பட வேண்டும்... மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இவரை போலவே, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சம்பந்தப்பட்ட ஆப்களுக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து, விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.

விசாரணை
இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சொல்லும்போது, "கிட்ஹப் (சாப்ட்வேர் மேம்பாடு மற்றும் பதிப்பு கட்டுப்பாட்டிற்கான வெப்சைட் ஹோஸ்டிங் வழங்குநர்) மூலம் இந்த சர்ச்சைக்குரிய ஆப்கள் முடக்கம் செய்யப்பட்டுவிட்டன.. மேலும் போலீசாரும், சிஇஆர்டி பிரிவு விசாரணையும் இது தொடர்பாக நடத்தி வருகின்றனர்" என்றார்..

சல்லிடீல்
ஆப்கள் முடக்கம் செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, கடந்த வருடம் அடையாளம் தெரியாத நபர்களால் 'சல்லிடீல்' என்ற ஆப் உருவாக்கப்பட்டது... அவர்கள்தான் குறிப்பிட்ட சமூக பெண்களின் போட்டோவை இதில் அதிகளவில் பயன்படுத்தி உள்ளனர்.. அதாவது 'சல்லி' என்பது பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இழிவான வார்த்தையாகும்... தேர்வு செய்யப்பட்ட பெண்களின் போட்டோவை சோஷியல் மீடியாவில் அவர்களே ட்ரோல் செய்துவிடுவார்கள்.. அதில் சில பெண்களின் போட்டோக்களை டீல் ஆஃப் தி டே என்ற பெயரில் ஏலமும் விடுவார்கள்.

கோரிக்கை
இப்படித்தான், இதே சல்லி டீல்ஸ் குறித்து ஏற்கனவே டெல்லி, உத்தரபிரதேசத்தில் 2 கேஸ்கள் பதிவாகி உள்ளன.. இந்த புல்லி பாய் ஆப்ஸ் உருவாக்கியவர்கள் மீதும், ஆப்களின் போட்டோக்களை வெளியிட்ட டிவிட்டர் பக்கத்தின் அட்மின்கள் மீதும் மும்பை சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் என்றார். இஸ்லாமிய பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்கள் தடுக்கப்படவேண்டும் என்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக அமைப்பினரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications