"50 கிராம் பவுடரை வைத்து உள்ளே தள்ளிடுவேன்.." போராடும் மாணவர்களை மிரட்டிய போலீஸ்.. பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

மும்பை: நீட் விவகாரம் தொடர்பாக இப்போது நாடு முழுக்க போராட்டம் நடந்து வரும் நிலையில், மும்பையில் மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களை மிரட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கைதான மாணவர்களை ஏற்றி சென்ற போலீஸ் வேன் ஓட்டுநர், மீண்டும் போராட்டத்துக்கு வந்தால், பொய்யாக போதை பொருள் வழக்கு போட்டு வாழ்க்கையையே காலி செய்துவிடுவேன் என மிரட்டும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பி வருகிறது.

டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. நாடு முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் திரள்கிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களாக மும்பையிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

NEET Protest Mumbai Maharashtra neet

மிரட்டல்

அப்படி மும்பையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அப்போது அந்த போலீஸ் வேன் ஓட்டுநர், மாணவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மீண்டும் போராட்டம் என வந்தால்.. பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து வாழ்க்கையையே காலி செய்துவிடுவேன் என மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொய் கேஸ்

அந்த வீடியோவில், போலீஸ் வாகனத்தை ஓட்டிய அதிகாரி, பின்னால் அமர்ந்திருந்த மாணவர்களை மிரட்டுவது தெளிவாக தெரிகிறது. அந்த காவலர், "இனிமேல் போராட்டத்தில் உங்களை பார்த்தால் நான் மோசமான நபராக மாறிவிடுவேன்.. உங்கள் பாக்கெட்டில் 50 கிராம் போதைப்பொருளை நானே வைத்து வழக்கு போடுவேன். பிறகு உங்களுக்கு ஜாமீனும் கிடைக்காது. சிறையிலேயே வாழ்க்கை முழுவதும் அழுக வேண்டியதுதான்" என மிரட்டுகிறார்.

ஆனால், அந்த மிரட்டலுக்கு அஞ்சாத மாணவர்கள் சிலர் சிரித்தபடி பதிலளிக்கிறார்கள். அப்போது அந்த காவலர் மேலும், "உங்களால்தான் நாங்கள் கஷ்டப்படுகிறோம்" என்று கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அந்த வீடியோவை பகிர்ந்து மும்பை போலீசார் மிக கடுமையாக விமர்சித்தன.

விசாரணை

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், மும்பை காவல்துறை துணை ஆணையர் அக்பர் பதான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான ஓட்டுநரை ஏற்கனவே பணியிட மாற்றம் செய்துள்ளோம்" என்றார்.

இந்த வீடியோவை பகிர்ந்த மும்பை காங்கிரஸ், "இது மாணவர்களை மிரட்டும் செயல் மட்டுமல்ல.. ஜனநாயக உரிமைகள் மீதான நேரடி தாக்குதல். மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர, மிரட்டக் கூடாது" என்று பதிவிட்டுள்ளது. காங்கிரஸ் மட்டுமின்றி ஆம் ஆத்மியும் மாணவர்களை மிரட்டுவதை ஏற்க முடியாது என கடுமையாக சாடியுள்ளது.

பின்னணி

நீட் முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக கடந்த திங்கள்கிழமை மாணவர்கள் போராட்டத்தை கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்தப் போராட்டம் தற்போது பல மாநிலங்களுக்கு பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+