மும்பைக்கு ஆபத்து.. ஆக்ரோஷமாக போகும் அரபிகடல்.. மணிக்கு 110 கி.மீ காற்று வீசும்.. புதிய புயலால் பீதி

அரபிக்கடலில் வீச போகும் புயலால் மும்பைக்கு ஆபத்து வர உள்ளது

Subscribe to Oneindia Tamil

மும்பை: அடுத்த ஆபத்தில் சிக்க போகிறது மும்பை... காரணம், அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது.. இந்த புயல் மகாராஷ்டிரா பக்கம்தான் செல்ல போகிறதாம்.. ஜுன் 3-ம்தேதிதான் இந்த புயல் அங்கிருந்து கரையை கடக்க போகிறது என்றாலும்,மும்பையில் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    களை கட்டும் தென்மேற்கு பருவமழை | புயலால் மும்பையில் மழை

    இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள சுருக்கம் இதுதான்:

    "அரபி கடலில் மத்திய கிழக்கு பகுதியிலும் லட்சத்தீவுகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது நிலவி வருகிறது.. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது.. பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும்.

    குஜராத்

    குஜராத்

    அநேகமாக நாளை அதாவது ஜுன் 2-ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கியும், பிறகு, வடக்கிலிருந்து கிழக்காகவும் நகர்ந்து மகாராஷ்டிராவுக்கு செல்ல உள்ளது.. மறுநாள், ஜுன் 3-ம் தேதி மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியில் இருந்து குஜராத்தின் தெற்கு பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

    பலத்த மழை

    பலத்த மழை

    இதனால் மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரைகளில் பலமான காற்றும், மிக மிக பலத்த மழைக்கும் பெய்யவும் வாய்ப்புள்ளது. எனவே, குஜராத், மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளுக்கு வருகிற 3-ம் தேதி முதல் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. அதேபோல, குஜராத், கோவா ஆகியவற்றுக்கும் மறுநாள், ஜுன் 4-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

    மும்பை

    மும்பை

    அரபிக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறி மகாராஷ்டிராவின் வடக்கு மற்றும் குஜராத்தின் தெற்கு பகுதியில் கடக்க உள்ளது.. இதனால் மும்பையில்தான் நிறைய பாதிப்பு ஏற்படக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இழப்பு

    இழப்பு

    ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்குதலில் நாட்டிலேயே முதன்மையான இடத்தில் உள்ளது மகாராஷ்டிரா மாநிலம்தான்.. அதிலும் மும்பை, தாராவியை நினைத்தாலே கலங்குகிறது.. வைரஸ் தொற்றால் மீள முடியாமல் தவிக்கும் மும்பை, இப்போது புயல் பாதிப்பிலும் சிக்க போவது பெருத்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.. நிச்சயம், இந்த மாநகரில் பாதிப்புகளையும் நிறையவே சந்திக்க நேரிடும் என தெரிகிறது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    ஜுன் 3-ம்தேதிதான், குஜராத்தின் ஹரிஹரேஸ்வர், டாமன் பகுதியை கடக்க உள்ளதால், ராய்காட், டாமன், மும்பை , நவி மும்பை, பண்வேல், கல்யாண், டோம்பிவாலி, மிரா-பாயாந்தர், வாசி, விரார், உல்ஹஸ்நகர், பாதல்பூர், அம்பர்நாத் ஆகிய பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை வந்துள்ளது..

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    அன்றைய தினம் புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 129 ஆண்டுகளுக்குப் பிறகு கடலோர மகாராஷ்டிரா பகுதிகளை ஜுன் மாதத்தில் தாக்க காத்திருக்கிறது அரபிக் கடல் புயல் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில்தான் இப்படி எச்சரிக்கையும் வெளியாகி உள்ளது. அதனால் ஜுன் 3-ம் தேதிக்குள் மும்பைக்கு பெரிதளவு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+