Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nita Ambani: வெள்ளி விற்கிற விலைக்கு.. நீதா அம்பானி என்ன செய்தாருன்னு பாருங்க! ஹேண்ட் பேக் விலை மட்டும் இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல தொழில் அதிபரும் இந்திய ஆடை வடிவமைப்பாளருமான மணிஷ் மல்கோத்ரா மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தீபாவளி விருந்து வைத்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் நீதா அம்பானி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதா அம்பானி விலை உயர்ந்த வெள்ளி சேலை அணிந்து வந்திருந்தார். தங்கம் விலைக்கு நிகராக வெள்ளி விலையும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வரும் நிலையில் நீதா அம்பானி அணிந்து இருந்த இந்த வெள்ளி சேலை அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக இருந்தது.

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரூ.9.32 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் உள்ளார். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இவரும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை உள்ளிட்டவற்றில் இயக்குநராக உள்ளார்.

nita-ambani-turns-heads-with-rare-hermes-bag-at-manish-malhotra-s-diwali-bash

வெள்ளி சேலையில் நீதா அம்பானி

நீதா அம்பானியின் ஆடம்பர லைஃப்ஸ்டைல் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வியக்க வைக்கும் விதமாக இருக்கும். அவரிடம் உள்ள கார் கலெக்‌ஷன் மற்றும் அவரது விலை உயர்ந்த உடைகள் குறித்த தகவல்கள் வியக்க வைக்கும். இந்த நிலையில்தான், நீதா அம்பானி வெள்ளியில் சேலை அணிந்து தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:

தீபாவளி விருந்து

பிரபல தொழில் அதிபரும், இந்திய ஆடை வடிவமைப்பாளருமான மணிஷ் மல்கோத்ரா மும்பையில் உள்ள அவரது வீட்டில் தீபாவளி விருந்து வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நீதா அம்பானி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதா அம்பானி விலை உயர்ந்த வெள்ளி சேலை அணிந்து வந்திருந்தார். தங்க விலைக்கு நிகராக வெள்ளி விலையும் தற்போது போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்து வரும் நிலையில், நீதா அம்பானி அணிந்திருந்த இந்த வெள்ளி சேலை அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக இருந்தது.

கைப்பையில் 3,025 வைரக் கற்கள்

அதேபோல், நீதா அம்பானி கையில் விலை உயர்ந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஒன்றை வைத்திருந்தார். இந்த பையின் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும். அவரது ஹேண்ட்பேக்கின் விலை மட்டும் ரூ. 17 கோடி என்று சொல்லப்படுகிறது. நீதா அம்பானி அணிந்திருந்த வெள்ளி சேலையில் ஜரிகை ஜொலித்தது. அதேபோல், அவர் காதில் அணிந்திருந்த மரகத காதணி அதற்கு ஏற்றாற்போல இருந்தது.

நீதா அம்பானி கையில் வைத்திருந்த ஹெர்ம்ஸ் பிர்கின், உலகிலேயே வெறும் 3 பேரிடம் மட்டும்தான் உள்ளது. இதில் நீதா அம்பானியும் ஒருவர் ஆவார். இந்த கைப்பையில் 3,025 வைரக் கற்கள் உள்ளன. இந்த கைப்பையில் வைரங்கள் ஜொலிஜொலித்தன.

வைரலாகும் புகைப்படங்கள்

இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சினிமா பிரபலங்களையும் மிஞ்சும் அளவில் வெள்ளி சீக்வின் சேலை மற்றும் வைரக் கற்களால் ஆன கைப்பையுடன் வலம் வந்த நீதா அம்பானி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

nita-ambani-turns-heads-with-rare-hermes-bag-at-manish-malhotra-s-diwali-bash

இது தொடர்பான படங்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வெள்ளி விலை இன்றைய தேதிக்கு ஒரு கிராமுக்கு ரூ. 9-வும், கிலோவுக்கு ரூ. 9,000-வும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 206-க்கும், ஒரு கிலோ ரூ. 2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நீதா அம்பானி வெள்ளி சேலையில் வந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+