Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அள்ளி அள்ளி கொடுத்த டாடா அறக்கட்டளை அடுத்த சேர்மன் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்த ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதற்கிடையே டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா உயிருடன் இருந்த போது இந்த நோயல் டாடாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவுக்கு கடந்த திங்கள்கிழமை திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ratan tata ratan tata death tata

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த புதன் இரவு உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

டாடா அறக்கட்டளை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே ரத்தன் டாடா விலகி இருந்தாலும், டாடா அறக்கட்டளையின் தலைவராக அவரை தொடர்ந்து வந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இப்போது நோயல் டாடா புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இவர்: ரத்தன் டாடாவின் தந்தை நேவல் ஹெச் டாடாவின் இரண்டாவது மனைவியின் மகன் தான் இந்த நோவல் டாடா. ரத்தன் டாடாவுக்கு பிறகு இவரே டாடா அறக்கட்டளையின் தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியே நடந்துள்ளது. ரத்தன் டாடாவும் கூட இவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புகள்: நோயல் டாடா 2000களின் தொடக்கத்தில் டாடா குழுமத்தின் இணைந்த நிலையில், அப்போது முதலே டாடா வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர் ஏற்கனவே சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் குழுவில் அறங்காவலராக உள்ளார். தற்போது ​​நோயல் டாடா, டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். மேலும், அவர் ஜூடியோ மற்றும் வெஸ்ட் சைட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ட்ரெண்டின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனைகள்: இவர் டாடா குழுமத்தின் வர்த்தக மற்றும் விநியோகப் பிரிவான டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார். 2010 முதல் 2021 வரை அவரது தலைமையில் டாடா இன்டர்நேஷனல் மிக பெரிய லாபத்தைச் சம்பாதித்தது. அவர் பதவியேற்ற போது அதன் வருவாய் 500 மில்லியனாக இருந்த நிலையில், அதை $3 பில்லியனாக உயர்த்திக் காட்டினார்.

டாடாவின் சில்லறை விற்பனைப் பிரிவான ட்ரெண்ட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராகவும் அவர் பல சாதனைகளைச் செய்தார். 1998ல் ட்ரெண்ட் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கடை வைத்திருந்தது. இப்போது 700க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் கடைகள் உள்ளன. இப்படிப் பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் நோயல் டாடா. இவர் தான் இப்போது டாடா அறக்கட்டளையின் அடுத்த சேர்மேனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரத்தன் டாடாவுக்கு ஜிம்மி என்ற உடன் பிறந்த சகோதரர் இருந்தாலும் கூட அவரை விட நோயல் டாடாவுடன் தான் நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜிம்மி டாடா குடும்ப தொழில்களில் ஆர்வம் காட்டவில்லை. அவர் மும்பையில் சாதாரண ஒரு 2 பிஹெச்கே வீட்டில் தான் வசித்து வருகிறார். ரத்தன் டாடா இறுதிச்சடங்கில் ஜிம்மி டாடாவும் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+