மருமகளை டிவி பார்க்க விடாதது கொடுமை அல்ல - மும்பை ஹைகோர்ட் கருத்து
மும்பை: மருமகளை டிவி பார்க்கவும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை சந்திக்கவும், கோவிலுக்கு தனியாக செல்லவும் அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் வாரங்கானையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணம் இருவருக்கும் சரியானதாக அமையவில்லை. தொடக்கம் முதலே அந்த பெண்ணுக்கும், கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு அவர் அங்கு திடீரென்று தற்கொலையும் செய்து கொண்டார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது கணவன் வீட்டில் செய்த கொடுமைகள் தான் அந்த பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்று போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் பெற்றார் சார்பில், தங்களின் மகள் தயாரித்த உணவை கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கேலி செய்துள்ளனர். வீட்டில் டிவி பார்க்க அனுமதிக்கவில்லை.
அதேபோல் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை. அதேபோல் கோவிலுக்கு தனியாக சென்று வரவும் தடை விதித்துள்ளனர். இதுதவிர நள்ளிரவில் மாமியார் தண்ணீர் எடுத்து வரும்படி கட்டளையிட்டுள்ளார். இதுபோன்ற கொடுமைகளால் தான் மனம் உடைந்து அந்த பெண் தற்கொலை செய்து விட்டார் என்று புகாரளித்தனர்.
அதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தற்கொலை செய்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அலகாபாத்தில் உள்ள மும்பைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி அபய் வாக்வாஸ் விசாரித்தார். அப்போது தற்கொலை செய்த பெண்ணின் பெற்றோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் என்ன வகையான கேலி செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார். அதேபோல் அண்டை வீட்டாருடன் பழகுவதை தடுப்பதையும், டிவி பார்க்க அனுமதிக்காதது, நள்ளிரவில் தண்ணீர் கேட்பது உள்ளிட்டவற்றை கொடுமை என்று கூறிவிட முடியாது. கொடுமை என்றால் மனுதாரரின் மகள் மீது தாக்குதல் அல்லது மனரீதியான துன்புறுத்தல் நடந்து இருக்க வேண்டும் என்று கூறி மேல்முறையீடு செய்தவர்களின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.












Click it and Unblock the Notifications