மத்திய அரசின் தீபாவளி பரிசு! பெட்ரோல், டீசல் விலை குறைப்பு? மகாராஷ்டிர தேர்தல் முன் வரும் அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் போதிலும், பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதையொட்டி பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படலாம் எனத் தகவல் பரவியது. இதற்கிடையே மத்திய அரசு அதிகாரி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை என்பது சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து மாறுபடும். இப்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தாலும் இந்தியாவில் விலை குறைக்கப்படவில்லை.

maharashtra assembly election 2024 petrol diesel 2024

குறிப்பாகக் கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலருக்கு கீழ் சரிந்தது.. கடந்த 2021 டிசம்பருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்தளவுக்குக் குறைந்ததே இல்லை. இன்று சற்று விலை உயர்ந்து அது வர்த்தகமாகி வருகிறது.

கச்சா எண்ணெய்: கச்சா எண்ணெய் விலை இந்தளவுக்குக் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் கூட பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், இப்போது அதைக் குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வரும் நவ. மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே இது குறித்த கேள்விக்கு பெட்ரோலிய அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிகிறது எனச் சொல்ல முடியாது. ஏற்ற இறக்கத்துடன் அது நிலையற்றதாகவே இருக்கிறது. கடந்த வாரம் $70க்கு கீழே போன போதிலும் உடனே அது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதுபோல நிலையில்லாமல் இருப்பும் போது பெட்ரோல் விலையைக் குறைக்க வாய்ப்பு இல்லை" என்றார்.

மாற்றம் இல்லை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அன்றாட சந்தைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் உரிமை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு உள்ளன. இருப்பினும், நமது நாட்டில் 90% சில்லறை விற்பனையைக் கட்டுப்படுத்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) கடந்த 2021க்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. இடையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பு மட்டும் 2 ரூபாய் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எப்போது அறிவிப்பு வரும்: மகாராஷ்டிர தேர்தலையொட்டி பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்ற கேள்விக்கு அந்த அதிகாரி, "இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் என்னால் இதற்கு உறுதியான பதிலைத் தர முடியாது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால், விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் உரிய முடிவுகளை எடுக்கும்.

எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைத்த உடன் மீண்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரித்தால் விலையை உயர்த்த நேரிடும். தேர்தல் நேரத்தில் இப்படியொரு சூழல் ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. தீபாவளி நெருங்கும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வரலாம்" என்றார்.

மத்திய அரசின் 3 எண்ணெய் நிறுவனங்களின் லாபம் எண்ணெய் விலை உச்சம் தொடுவதற்கு முன்பு ரூ.39,356 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் அதன் நிகர லாபம் ரூ.81,000 கோடியைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+