தெற்கு ரயில்வேக்கு கோயிலே கட்டலாம்.. மின்சார ரயிலில் பயணிப்போரின் வலி மிகுந்த இந்த குரலை கேளுங்க
மும்பை: செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னைக்கு மின்சார ரயிலில் வருவது தான் வாழ்க்கையிலேயே கடினமான ஒன்று என்று நினைக்கிறீங்களா.. அதைவிட மோசமான, வாழ்க்கையில் சவாலான ஒரு விஷயம் என்றால், அது மும்பை புறநகர் ரயில்கள் தான். மும்பை புறநகர் ரயில்களில் தினம் தினம் மக்கள் படும் அவஸ்தைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.. இதை பாருங்கள்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் போன்ற நான்கு நகரங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயங்குகின்றன. இதில் முழுமையாக மொத்த நகரமும் மின்சா ரயில்களால் கவரப்பட்ட நகரங்கள் என்றால் அது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்கள் மட்டுமே. இதில் மும்பை தான் இருப்பதிலேயே மிகவும் நெரிசலான மின்சார ரயில்களை கொண்ட நகரமாகும்.

அரை நாள் மின்சார ரயில் இயங்காமல் போனால், மொத்த மும்பை நகரமும் ஸ்தம்பித்து போய்விடும். அங்கு வேலைக்கு செல்வோர் படும் அவதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தினமும் காலையில் ரயிலில் ஏறினால் கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் அலைமோதும். எப்படியாவது ரயிலில் ஏறி வேலைக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிட மாட்டோமா என்று ஏங்காதவர்களே இல்லை..
ரயில் பயணம் மும்பைவாசிகளுக்கு சுகமானதாக இல்லாமல் சுமையானதாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஐந்து நிமிடத்திற்கு ஒருரயில் வந்தாலும் இடமே கிடைக்காது. நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பை மாநகரில் வேலைக்கு செல்வோருக்கு ஏதுவாக புறநகர் ரயில் சேவைகளில் பெரிய மாற்றங்கள் வந்தால் ஒழிய, அவர்களின் கவலை தீராது.
இப்படியான சூழலில், மும்பை மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் தாங்காமல், படியில் தொங்கியபடி பயணிக்கும் சிலர், கீழே விழுந்து உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. அப்படித்தான் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஒருவர் வேலைக்கு செல்லும் போது மின்சார ரயிலில் தவறி விழுந்து இறந்து போனார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன், குடும்பம் நடத்த வேலை வேண்டும் தான்.. வேலையைக் காப்பாற்ற வேண்டுமானால் நேரத்துக்கு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் தான்.. அதற்கு அலுவலகத்திற்குச் செல்ல ரயிலைப் பிடிக்க வேண்டும தான்.. ஆனால் தினசரி வேலைக்கு தாமதமாக போகக்கூடாது என்பதற்காக நெரிசலான ரயில்களில் நம் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய நிலை தான் இங்கு இருக்கிறது வாழ்க்கையை விட குடும்பம் முக்கியமானது . மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட உயிர்கள் முக்கியம் என்று ரயில்வேக்கு நெட்டிசன் கூறியுள்ளார்.
சென்னை மின்சார ரயில்களை விட மும்பை மின்சார ரயில்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். நம்ம தெற்கு ரயில்வே முடிந்தவரை அதிக மின்சார ரயில்களை செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கி வருவதால் ஓரளவு தப்பிக்க முடிகிறது. இல்லாவிட்டால் மும்பை நிலைமை தான் சென்னைக்கும் ஏற்படும் என்கிறார்கள் ரயில் பயணிகள்.












Click it and Unblock the Notifications