"என் நண்பனையே ஏமாத்துவியா".. பாஜக எம்எல்ஏவிடம் இருந்த நிலத்தை பிடுங்கி கொடுத்த பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரதமர் மோடியின் பள்ளி கால நண்பர் ஒருவரின் நிலத்தை மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ அபகரித்து வைத்து கொண்டார். இதில் அதிருப்தியடைந்தவர் பிரதமர் மோடியை சந்தித்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த சந்திப்பு நடந்த அடுத்த ஒரு வாரத்தில் பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய நிலத்தை பிரதமர் மோடியின் நண்பரிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

pm-schoolmate-gets-back-his-disputed-land-from-bjp-mla-in-maharashtra-after-met-with-modi

மகாராஷ்டிராவின் மீரா ரோடு பகுதியில் வசித்து வருபர் அஸ்கரலி வோரா. இவருக்கு வயது 81. இவரும், பிரதமர் நரேந்திர மோடியும் பள்ளி கால தோழர்கள். குஜராத்தில் உள்ள வாத்நகர் பிஎன் பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.

காராஷ்டிராவின் மிரா பயந்தர் பகுதியில் அஸ்கரலி வோராவிற்கு சொந்தமாக 2,810 சதுரமீட்டர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர் கடந்த 1989ம் ஆண்டில் வாங்கினார். அதன்பிறகு அதனை விற்கவில்லை.

ஆனால் இந்த நிலத்தை கடந்த 2011ம் ஆண்டு 2 கட்டுமான நிறுவனங்கள் போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்ததாக கூறப்படுகிறது. அதோடு இந்த நில அபகரிப்பல் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவிற்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அஸ்கரலி வோரா சோகமடைந்தார். இதுதொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டப்போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே தான் தனது நிலத்தை மீட்க பள்ளி கால நண்பர் பிரதமர் மோடியிடம் உதவி கேட்க அஸ்கரலி வோரா முடிவெடுத்தார். கடந்த 8 ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை, அஸ்கரலி வோரா சந்தித்து பேசி நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். அதனை கேட்ட பிரதமர் மோடி, நிச்சயம் உதவி செய்வதாக கூறினார்.

அதன்படி அஸ்கரலி வோராவிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா சர்ச்சைக்குரிய நிலத்தை விட்டு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அஸ்கர் அலி வோரோவுக்கு எதிராக போலீசில் கொடுத்த புகாரையும் திரும்ப பெறுவதாக பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா அறிவித்துள்ளார். இதனால் அஸ்கரலி வோரா ஹேப்பியாகி உள்ளார்.

பிரதமர் மோடியை அஸ்கரலி வோரா சந்தித்து தனது குறைகளை கூறிய நிலையில் மகாராஷ்டிரா அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த தொடங்கினர். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதன்மை செயலாளர் ஸ்ரீகார் பர்தேசி தலைமையில் மாநில செலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அஸ்கரலி வோரா, பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா பங்கேற்றார். இந்த கூட்டத்தில் நிலம் உள்ள மிரா - பயந்தர் மாநகராட்சியின் ஆணையர் ராதாக வினோத் சர்மா, நகர திட்டமிடல் அதிகாரி புருசோத்தம் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அஸ்கரலி வோரா தன்னிடம் உள்ள அந்த நிலத்துக்கான ஆவணங்களை வழங்கினார். இதையடுத்து பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா அந்த நிலத்தை விட்டு கொடுப்பதாகவும், அதில் உள்ள எந்த உரிமையையும் இனி எடுத்து கொள்வது இல்லை. கட்டுமான அனுமதி சான்றை திரும்ப அளித்து விடுகிறேன் என்று கூறினார். இதன்மூலம் அஸ்கரலி வோராவின் நிலம் மீண்டும் அவருக்கே கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+