குக்கரில் வெந்த உடல் உறுப்புகள்! பார்த்ததும் "வாந்தி" எடுத்த போலீசார்.. பார்த்ததும் ஒரே ஓட்டம் தான்!
மும்பை: மகாராஷ்டிராவில் இளம் பெண் ஒருவர் தனது லிவ் இன் பார்ட்னரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு ஷர்த்தா வாக்கர் என்ற பெண் டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது காதலன் அப்தாப் என்பவனே ஷர்த்தா வாக்கரை கொன்று துண்டு துண்டாக வெட்டினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்தே நாம் இன்னும் மீளாத நிலையில், இப்போது மற்றொரு கொடூரம் நடந்துள்ளது. இந்த முறை டெல்லியில் 56 வயதான நபர் லிவ் இன் பார்ட்னரை கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது.
கொலை: இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சரஸ்வதி வைத்யா (32) என்பவரை அவரது லிவ் இன் பார்ட்னர் மனோஜ் சானே (56) கொடூரமாகக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் அகமத்நகரை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இதில் மனோஜ் சானே தொழில்துறை பயிற்சியை முடித்திருந்தார். சரஸ்வதி பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காதவர்.
சரஸ்வதி தனது சகோதரிகளுடன் ஒரு காப்பகத்தில் வசித்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை ஒன்றில் தான் மனோஜை சரஸ்வதி மீட் செய்துள்ளார். பார்த்தவுடன் ஒருவருக்கு ஒருவர் பிடித்துவிட்டது. இதையடுத்து இருவரும் லிவ் இன் உறவில் வாழ ஆரம்பித்துள்ளனர். காப்பகத்தில் இருந்தவர்களிடம் மனோஜை தாய் மாமா என்றே அறிமுகப்படுத்தியுள்ளார்.
5 ஆண்டுகளாக: அதன் பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். 5 ஆண்டுகளாக அங்கே ஒன்றாக இருந்தாலும் கூட அவர்கள் அங்குள்ளவர்களிடம் பெரிதாகப் பேசியது கூட இல்லையாம். பெரும்பாலும் அவர்கள் இருவரும் வீடுகளிலேயே இருப்பார்கள் என்கிறார் எதிர் வீட்டில் வசிக்கும் சோமேஷ் ஸ்ரீவஸ்தவா.. இவர் தான் போலீசாருக்கு இது குறித்து முதலில் தகவல் கொடுத்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் இங்கு 5 ஆண்டுகளாக இருக்கிறார்கள்.. ஆனால், அவர்கள் யாரிடமும் பெரிதாகப் பேச மாட்டார்கள்.. அவர்களின் பெயர் கூட எங்களுக்குத் தெரியாது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலேயே நான் போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தேன். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் அபார்ட்மெண்ட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
உண்மையில் அங்கு அப்படி இருக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.. ரூம் முழுக்க மனித உடல் உறுப்புகள் சிதறிக் கிடந்தன. சமையலறையில் பாத்திரங்களில் வேகவைத்து வறுக்கப்பட்ட மனித உடல் உறுப்புகள் இருந்தன. இதைச் சற்றும் எதிர்பார்க்காத காவலர்கள் சிலர் அப்போதே வாந்தி எடுத்தனர்" என்று அவர் தெரிவித்தார். சரஸ்வதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
சரஸ்வதி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என மனோஜ் சந்தேகித்தாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட சண்டையில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இப்போது கைது செய்யப்பட்டுள்ள மனோஜ் அளித்துள்ள வாக்குமூலம் அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. சரஸ்வதி விஷம் குடித்து உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள மனோஜ், போலீசாருக்கு பயந்து தான் உடலை மட்டுமே வெட்டி அப்புறப்படுத்த முயன்றதாகத் தெரிவித்தார்.
மேலும், சரஸ்வதி தனது மகளைப் போன்றவர் என்றும் கூறி அதிர்ச்சியளித்தார். இப்போது போலீசார் சரஸ்வதியின் சகோதரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷரத்தா வாக்கர் கொலை சம்பவத்தைப் பார்த்தே இவரும் உடலைத் துண்டு துண்டாக வெட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், துர்நாற்றத்தைச் சமாளிக்க உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்தும் ரோஸ்ட் செய்தும் உள்ளதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications