சைஃப் அலி கான் விவகாரம்.. கொள்ளையன் வீட்டிற்குள் வந்தது எப்படி? அடையாளம் கண்டறிந்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சைஃப் அலி கான் வீட்டிற்குள் புகுவதற்கு கொள்ளையன் தீ விபத்து ஏற்பட்டால் அவசரத்திற்கு பயன்படுத்தும் படிகளை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பதும் உறுதியாகியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகரான சைஃப் அலி கானின் வீட்டில் நள்ளிரவில் கொள்ளையடிக்க முயற்சிகள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது வீட்டில் வேலை பார்க்கும் நபர் கொள்ளையனை முதலில் பார்த்து சத்தம் எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொள்ளையனை தடுக்க சைஃப் அலி கான் முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில், சைஃப் அலி கானை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் தப்பியுள்ளான்.

saif ali khan bollywood cinema

இதன்பின் சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மொத்தமாக 6 இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், 2 இடங்களில் காயத்தின் தன்மை தீவிரமாக இருந்துள்ளது. இதன்காரணமாக மருத்துவர்கள் சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தற்போது சைஃப் அலி கான் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாமல் மும்பை அரசியலையும் உலுக்கியுள்ளது. ஏனென்றால் மும்பையின் பாந்த்ரா பகுதி நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் அதிகம் வசிக்கும் இடமாகும். இதனால் போலீஸ் பாதுகாப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். இதனை மீறி எப்படி கொள்ளையன் சைஃப் அலி கான் வீட்டிற்குள் புகுந்தான் என்பதே கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொள்ளையன் சைஃப் அலி கான் வீட்டிற்குள் எப்படி வந்தான் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. கொள்ளையன் அருகில் இருந்து கட்டடத்தில் இருந்து சைஃப் அலி கான் காம்பவுண்டிற்குள் புகுந்துள்ளான். இதன்பின் வீட்டிற்குள் வருவதற்கு, தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் அவசர படிக்கட்டுகளை பயன்படுத்தி இருப்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையன் வீட்டின் பின்புறத்தில் இருந்து உள்ளே வருவதும், சைஃப் அலி கானை குத்திவிட்டு வெளியேறும் காட்சிகளும் பதிவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக கொள்ளையனின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் கொள்ளையன் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+