மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2024 தேர்தல், பிரதமர் வேட்பாளர், ஸ்டாலின்- மமதா வெற்றிகள்.. பரபரக்க வைத்த பவார்- பி.கே.சந்திப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நாளையிலிருந்து.. தமிழ்நாடு முழுக்க புதிய ஊரடங்கு தளர்வுகள்.. கவனிக்க வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள் நாளையிலிருந்து.. தமிழ்நாடு முழுக்க புதிய ஊரடங்கு தளர்வுகள்.. கவனிக்க வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கும் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். தேர்தல்களில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்தது.

தேர்தல் வியூகத்துக்கு குட்பை

தேர்தல் வியூகத்துக்கு குட்பை

இதனைத் தொடர்ந்து 9 ஆண்டுகால தேர்தல் வியூக வல்லுநர் பணியை முடித்து கொள்கிறேன்; இனி என்குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவேன் என கூறியிருந்தார் பிரசாந்த் கிஷோர்.

சரத்பவாருடன் திடீர் சந்திப்பு

சரத்பவாருடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில் மும்பையில் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து 3 மணிநேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது 2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

எதிர்க்கட்சி, பிரதமர் வேட்பாளர்

எதிர்க்கட்சி, பிரதமர் வேட்பாளர்

தற்போதைய நிலையில் வலிமையான எதிர்க்கட்சி என்பது இல்லை; அதனால் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும்; இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாராக இருக்க வேண்டும்? என்பது குறித்தும் சரத்பவாருடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசித்துள்ளார்.

தமிழகம், மேற்கு வங்க வியூகம்

தமிழகம், மேற்கு வங்க வியூகம்

மேலும் தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் என்ன மாதிரியான வியூகம் வகுக்கப்பட்டது என்பதையும் பவாரிடம் பிரசாந்த் கிஷோர் விவரித்துள்ளார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸுக்கு குறைவானா தொகுதிகள் ஒதுக்கப்பட்டதன் மூலம் திமுக எப்படி ஆதாயம் அடைந்தது எனவும் விவரித்தாராம் பிரசாந்த் கிஷோர்.

சந்திப்பு ஏன்?

சந்திப்பு ஏன்?

இருப்பினும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு பல்வேறு தலைவர்கள் தேர்தலின் போது ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கமட்டுமே தாம் பவாருடனான சந்திப்பு நிகழ்ந்தது என பிரசாந்த் கிஷோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர், பவார் சந்திப்புதான் இப்போது தேசிய அளவிலான ஹாட் டாபிக்.

English summary
Sources said that Prashant Kishor shared the TN, WB election strategies with NCP Chief Sharad Pawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X