அந்த ஒரு படம் போதுமே.. ஊரே வியக்குது! ஆரம்பித்தது ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டங்கள்! வாவ் செம
காந்தி நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் கோலாகலமாக நடக்க உள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது.
நமது நாட்டில் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருபவர் அம்பானி. இவரது தலைமையில் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

திருபாய் அம்பானி விட்டுச் சென்ற சொத்துகள் முகேஷ் அம்பானி- அனில் அம்பானி இடையே பிரிக்கப்பட்டது. அதன் பிறகு நிறுவனத்தின் சொத்து மதிப்பைப் பல மடங்கு உயர்த்தி முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையிலும் இடம் பிடித்தார்.
முகேஷ் அம்பானி: அவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த நீடா அம்பானியை கடந்த 1985ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என இரு மகன்களும் இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். கடந்த 2018இல் மகள் ஈஷாவுக்கு திருமணம் நடந்தது. மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கு வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா உடன் கடந்த 2019ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது.
இதற்கிடையே அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி குஜராத்தைச் சேர்ந்த ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்தாண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தமே நாடே வியக்கும் வகையில் ந்டத நிலையில், இப்போது திருமண கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது.
கொண்டாட்டம் ஆரம்பம்: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் இப்போது குஜராத்தின் ஜாம்நகரில் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. 'லகான் லக்வானு' என்ற நிகழ்வுடன் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
குஜராத்தி திருமணங்களின் முதல் விழாவான 'லகான் லக்வானு' முதல் திருமண அழைப்பிதழை உருவாக்குவதுடன் ஆரம்பிக்கிறது. இந்த முதல் அழைப்பிதழை 'கன்கோத்ரி' என்ற அழைக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட திருமண அழைப்பிதழ் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறக் கோயிலுக்கு வைக்கப்படும். இந்த விழா முடிந்த பிறகே அழைப்பிதழ்கள் உற்றார் உறவினர்களுக்கு அனுப்பப்படும்.
ஒரே ஒரு போட்டோ: இந்த விழாவில் மணப்பெண் ராதிகா அட்டகாசமான ஒரு லெஹங்காவை அணிந்து உள்ளார். பிரபல கஸ்டியூம் டிசைனர் அனாமிகா இந்த லெஹங்காவை வடிவமைத்திருந்தார். அத்துடன் வெள்ளை நிறத்தில் கலக்கலான ஒரு செயின், நெற்றிச்சுட்டி, மற்றும் கம்மல் அணிந்திருந்தார். அவரது இந்த அட்டகாசமான படம் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள அம்பானி குடும்பத்தின் பண்ணை வீட்டில் இந்த விழா நடைபெற்றது. இது மட்டுமின்றி திருமணத்திற்கு முன்பு நடக்கும் அனைத்து விழாக்களும் இந்த பண்ணை வீட்டில் தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாம்நகர்: அம்பானியின் குடும்பத்திற்கும் ஜாம்நகருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திரிபாய் அம்பானி தனது தொழிலை டெவலப் செய்தது இங்கே தான். இதன் காரணமாகவே அம்பானி குடும்பத்தினர் திருமணத்திற்கு இதை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து வரும் மார்ச் 1 முதல் 3 வரை ஜாம்நகர் இல்லத்தில் மற்ற சில திருமணத்திற்கு முந்தைய விழாக்களும் நடக்க உள்ளது. இந்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications