கடன் வாங்கி ஏமாற்றிய இளம்பெண்.. அலுவலக வளாகத்திலேயே சக ஊழியர் செய்த காரியம்.. புனேவில் ஷாக்
மும்பை: புனேவில் கடன் பிரச்சினையில் இளம்பெண் ஊழியர் ஒருவரை அலுவலக வளாகத்தில் வைத்தே சக ஊழியர் ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது. சக ஊழியர்கள் ஒருவர் கூட தடுக்க முன்வராமல் செல்போனில் படம் எடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் யெரவடா பகுதியில் விஎன்எஸ் குளோபல் என்ற பிபிஓ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுப்ஹதா கடோரா (வயது 28) என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரான கிருஷ்ணா கனோஜா (30)விடம் பணம் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி பலமுறை கடன் வாங்கினாராம் சுப்ஹதா. ஒரு கட்டத்தில், தான் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கிருஷ்ணா கனோஜா கேட்டுள்ளார். ஆனால், தனது தந்தைக்கு இன்னும் உடல் நிலை சரியாகவில்லை எனவும் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் பணம் தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
இதனால், சுப்ஹதாவின் சொந்த ஊருக்கு சென்ற கிருஷ்ணா, உண்மையிலேயே அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லையா? அல்லது பொய் கூறுகிறாரா? என்று பார்க்க சென்றுள்ளார். இதில், தந்தை நலமாக இருப்பதாகவும் சுப்ஹதா பொய்யான காரணங்களை கூறி பணத்தை கடனாக வாங்கியதையும் கண்டுபிடித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், சுப்ரஹதாவை அலுவலகத்தின் பார்க்கிங் பகுதிக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார்.

அங்கு வந்ததும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், சுப்ஹதா பணம் கொடுக்க மறுத்து இருக்கிறார். இதனால் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சுப்ஹதாவை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இந்த கொலை வெறி தாக்குதலை அங்கு நின்று கொண்டிருந்த சக ஊழியர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுள்ளனர்.
யாருமே தடுக்க முன்வரவில்லை. இந்த கொடூர சம்பவத்தை சிலர் செல்போனில் படம் எடுத்துள்ளனர். கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த சுப்ரஹதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணா கனோஜாவை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகிறார்கள்.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications