அப்செட்டில் ராகுல் காந்தி.. மகாராஷ்டிரா தேர்தல் வேட்பாளர் செலக்ஷனில் பாரபட்சம்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஆனால் வேட்பாளர் தேர்வில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி கவலை தெரிவித்திருக்கிறார்.
இந்திய அரசியலில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு என தனி முக்கியத்துவம் இருக்கிறது. இம்மாநிலத்தின் அரசியல், மத்திய அரசையே அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும் அளவுக்கு பவர்ஃபுல்லாக இருக்கும். ஆகவே, பாஜக-காங்கிரஸ் என இரண்டு பெரும் கட்சிகளும் இக்கோட்டையை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகின்றன. கூட்டணியை பொறுத்தவரை, பாஜக+ஷிண்டே சிவசேனா+அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மகாயுதி கூட்டணியாக இருக்கின்றன.

மறுபுறும், காங்கிரஸ்+உத்தவ் சிவசேனா+சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மகாவிகாஸ் கூட்டணியாக இருக்கிறது. மகாயுதிதான் தற்போதைய ஆளும் கட்சி என்றாலும் கூட, சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் மகாவிகாஸ் கூட்டணிக்கு பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மகாவிகாஸ் கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே இதே நம்பிக்கையில் தற்போது சட்டமன்ற தேர்தலையும் இக்கூட்டணி எதிர்கொள்ள ரெடியாகியுள்ளது.
ஏற்கெனவே உத்தவ் சிவசேனாவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் 48 பெயர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் காங்கிரஸ் தேர்தல் கமிட்டிக்கு முன்பு சமர்பிக்கப்பட்டபோது, ராகுல் காந்தி இது குறித்து அதிருப்தி தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா டுடே இது குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
அதாவது பட்டியலில், ஏன் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமான பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மட்டுமல்லாது விதர்பா மற்றும் மும்பை தொகுதிகளை ஏன் கூட்டணிக்கு விட்டுக்கொடுத்தீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது அம்மாநில காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை மகாவிகாஷ் கூட்டணி தலா 85-85-85 என பிரித்துக்கொண்டிருக்கிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கான பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதுவரை உத்தவ் சிவசேனா 65 இடங்களுக்கும், என்சிபி 45 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 48க்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. மீதமுள்ள வேட்பாளர்களையாவது பாரபட்சமின்றி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.
ஹரியானாவில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேராததால் கட்சி வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. எனவே இந்த தவறு மகாராஷ்டிராவில் நடக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. எனவேதான் கூட்டணியிடம் முடிந்தவரை பொறுமை காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications