வெப் சீரிஸில் வாய்ப்பு கொடுக்க.. ஆடிஷனில் நிர்வாணமாக நிற்க சொன்ன ராஜ் குந்த்ரா.. நடிகை பரபர புகார்
மும்பை: வெப் சீரிஸ் வாய்ப்புக்காக ராஜ்குந்த்ரா தன்னை ஆடையில்லாமல் ஆடிஷனுக்கு வர சொன்னதாக நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைதான சம்பவம் பாலிவுட் திரைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆபாச படங்களை தயாரித்து செல்போன் ஆப்களில் அப்லோடு செய்ததாக ராஜ் குந்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் அவர் மீது அடுத்தடுத்து சில குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சகாரிகா ஷோனா அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ வைரல்
இந்த போட்டி கடந்த பிப்ரவரி மாதம் வைரலானது. ஆனால் யாராலும் கவனிக்கப்படவில்லை. தற்போது ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டதால் இந்த வீடியோவும் தற்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் நடிகை சகாரிகா பேசுகையில் நான் ஒரு மாடல் நடிகை.

அனுபவம்
நான் 3 முதல் 4 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வருகிறேன். இந்த லாக்டவுனில் நான் கண்ட அனுபவத்தை நேயர்களுக்கு ஷேர் செய்ய விரும்புகிறேன். ஒரு வெப் சீரிஸில் நடிப்பதற்காக உமேஷ் காமத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

ராஜ்குந்த்ரா
இதையடுத்து அந்த வெப் சீரிஸை ராஜ்குந்த்ரா தயாரிப்பதாகவும் உமேஷ் தெரிவித்திருந்தார். நான் ராஜ் குந்த்ராவை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது தான் ஷில்பாவின் கணவர் என அறிமுகம் செய்து கொண்டார். இந்த வெப் சீரிஸில் தொடர்ந்து நடித்தால் நல்ல நிலையை அடையலாம் என்றார்.

வீடியோ காலில் ஆடிஷன்
இதையடுத்து நானும் இதற்கு ஒப்பு கொண்டேன். பின்னர் ஆடிஷன் நடத்த எனக்கு அழைப்பு வந்தது. அது வீடியோ காலில் நடைபெற்றது. அங்கு 3 பேர் இருந்தனர். அதில் ஒருவர் ராஜ் குந்த்ரா போல் தெரிந்தது. அவர்கள் என்னை நிர்வாணமாக நடிக்குமாறு கூறினர்.

நடிகை மறுப்பு
ஆனால் நான் முடியாது என மறுத்துவிட்டேன். இப்படியெல்லாம் ராஜ் குந்த்ரா செய்திருப்பது உண்மை என்றால் அவர் கைது செய்யப்பட வேண்டிய ஒருவர்தான் என அப்போதே அந்த நடிகை தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications