ஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ8 லட்சம் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா.. விசாரணையில் பகீர் தகவல்கள்
மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ 6 முதல் 8 லட்சம் வரை சம்பாதித்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை மலாடு பகுதியில் ஒரு சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படம் எடுத்து கொண்டிருந்த யாஸ்மின் ரோவா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகை வந்தனா திவாரியும் கைது செய்யப்பட்டார்.
இந்த கும்பல் சினிமா பட வாய்ப்புகளை தேடி அலையும் மாடல்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்தது விசாரணையில் அம்பலமானது.

ஆபாச படம்
இந்த ஆபாச படம் தயாரிப்பில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆடிஷனுக்கே ஆடையின்றி நிர்வாணமாக நிற்க சொன்னார் குந்த்ரா என நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திடுக் தகவல்கள்
இந்த நிலையில் ராஜ் குந்த்ரா குறித்து பல திடுக் தகவல்கள் கிடைத்தன. அதில் ஆபாச படங்கள் தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வந்துள்ளார். லாக்வுடன் நேரத்தில் அவருடைய தொழில் சூடு பிடித்திருக்கிறது. ஆபாச படங்களை மொபைல் செயலியில் ரிலீஸ் செய்ததன் மூலம் ஆரம்ப நாட்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்தது.

8 லட்சம்
அதன் பின்னர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரையிலும் ராஜ்குந்த்ரா சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆபாச படங்களை இது போன்று செயலியில் இந்தியாவிலிருந்து அப்லோடு செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்திருக்கிறார்கள்.

வீடியோ
இந்தியாவிலிருந்து வீ டிரான்ஸ்பர் வாயிலாக லண்டனுக்கு இத்தகைய வீடியோக்களை அனுப்பியுள்ளனர். ஹாட்ஷாட் என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைத்திருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications