அமிதாப் பச்சன் 3 அறிவுரைகளை வழங்கினார்.. அதில் ஒன்றை மட்டும் தற்போது பின்பற்ற முடியவில்லை- ரஜினி
Recommended Video
மும்பை: அரசியலுக்கு வர வேண்டாம் என நடிகர் அமிதாப் பச்சனின் ஒரு அறிவுரையை மட்டும் என்னால் பின்பற்ற முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் டிராக் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மும்பையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அமிதாப் பச்சன்
இந்த டிரெய்லர் தற்போது டாப் டிரென்டிங்கில் உள்ளது. அது போல் ரஜினி அந்த விழாவில் பேசிய பேச்சும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் பேசுகையில் 60 வயதில் மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கினார்.

தினமும் உடற்பயிற்சி
அதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அரசியலில் நுழையக் கூடாது என கூறினார். இதில் உடற்பயிற்சியை நான் தினமும் மேற்கொள்கிறேன்.

ரஜினி கருத்து
சுறுசுறுப்பாகவும் இயங்குகிறேன். ஆனால் அரசியலில் நுழையக் கூடாது என்ற அறிவுரையை மட்டும் என்னால் பின்பற்ற முடியவில்லை. அதாவது முதல் இரு அறிவுரைகளை இன்று வரை நான் பின்பற்றி வருகிறேன். ஆனால் மூன்றாவது அறிவுரையை மட்டும் என்னால் பின்பற்ற முடியவில்லை என்று ரஜினி தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் சந்திப்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என பல்வேறு தரப்பினர் அறுதியிட்டு கூறி வருகின்றனர். அண்மையில் கோவா திரைப்பட விழாவில் கலந்து கொண்டுவிட்டு சென்னை வந்த போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அற்புதம்
இந்த சந்திப்பில் வரும் 2021-இல் மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிச்சயம் நிகழ்த்துவர் என்றார். ரஜினியின் இந்த கருத்தை மற்ற கட்சியினர் , தான் வருவேன் என ரஜினி சொல்லவில்லையே, அதிசயம் அற்புதம் நடக்கும் என்றுதானே கூறினார் என அரசியல் தலைவர்கள் கூறினர். இந்த நிலையில் ரஜினியின் தர்பார் டிரெய்லர் விழா பேச்சு அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றே தெரிகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications