இவர் நோ சொன்னால் அவ்வளவுத்தான்! அம்பானி குடும்பத்தின் அச்சாணியே இவர்தான்! யார் இந்த ரமேஷ் பாய் ஒசா
மும்பை: கைவைக்கும் தொழில்கள் அனைத்தும் வெற்றி பெற்று இந்தியா மட்டுமின்றி உலக பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வருபவர் முகேஷ் அம்பானி. இந்நிலையில் தான் அவரது வெற்றிக்கு பின்னணியில் ரமேஷ்பாய் ஒசா என்பவர் இருப்பதும், அவர் யார்? எப்படி முகேஷ் அம்பானிக்கு உதவுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய தொழில் அதிபராக இருந்தவர் திருபாய் அம்பானி. இவர் மறைந்த பிறகு சொத்துகள் பிரித்து மகன்கள் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதில் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
இந்த பொறுப்பில் திறமையாக செயல்பட்ட முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்தார். மேலும் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்தார். முகேஷ் அம்பானிக்கு மனைவி நீதா அம்பானி, 2 மகன்கள், ஒரு மகள்கள் உள்ளனர்.
தற்போது பல்வேறு தொழில்களை முகேஷ் அம்பானி செய்து வருகிறார். போர்ப்ஸ் அறிக்கையின்படி முகேஷ் அம்பானி யின் சொத்து மதிப்பு என்பது 89 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கீடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முகேஷ் அம்பானியின் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் மக்கள் அதிகமாக கவனித்து வருகின்றனர். அவரது கார் டிரைவரின் சம்பளம் முதல் அவரது மகன் திருமணத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை அனைத்தும் பேசும்பொருளாக மாறிவிடுகிறது.
முகேஷ் அம்பானியை பொறுத்தமட்டில் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில் தான் அவரது வெற்றிக்கு பின்னால் குடும்பத்தை சாராத ஒருவர் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் ரமேஷ்பாய் ஒசா என்ற பைஸ்ரீ மகாராஜ். இவர் தான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்துக்கு குருவாக இருக்கிறார். குரு என்றால் தொழில் ரீதியாக இல்லை. மாாறாக ஆன்மீக குருவாக உள்ளார்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். இதனால் முகேஷ் அம்பானி தனது வீட்டில் எந்த சுபகாரியங்களை நடத்த விரும்பினாலும், புதிதாக தொழில் தொடங்க நினைத்தாலும் முதலில் அவர் சென்று பார்ப்பது ரமேஷ்பாய் ஒசாவை தான். இவர் குறித்து கொடுக்கும் நேரத்தில் தான் முகேஷ் அம்பானியின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள், புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ரமேஷ்பாய் ஒசா இல்லாமல் முகேஷ் அம்பானியின் வீட்டில் ஒரு அணுவும் அசையாது எனலாம்.
சமீபத்தில் கூட முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இந்த விழாவில் ரமேஷ் பாய் ஒசா பங்கேற்க சென்றபோது அவரை முகேஷ் அம்பானி, நிதா அம்பானி ஆகியோர் வாசல்வரை சென்று வரவேற்றனர். இப்படி இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியையே கட்டுப்படுத்தும் ரமேஷ் பாய் ஓசா எப்படி அவருக்கு நெருக்கமானார் என நீங்கள் கேட்கலாம்.
இதற்கு விடை கூற வேண்டும் என்றால் சற்று பின்நோக்கி நாம் செல்ல வேண்டும். ரமேஷ்பாய் ஒசா, முகேஷ் அம்பானியின் தாய் கீராபென்னுக்கு நெருக்கமானவர். அடிக்கடி வீட்டுக்கு சென்று வேதங்கள் சார்ந்த விஷயங்களை கூறி வந்தார். இதற்கிடையே தான் திருபாய் அம்பானி மறைவுக்கு பிறகு சகோதரர்கள் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட இருந்த நிலையில் அதனை தலையீட்டு சுமூகமாக தீர்த்து வைத்தவர் ரமேஷ் பாய் ஒசா தான். அன்று முதல் அவர் தொடர்ந்து முகேஷ் அம்பானிக்கு நெருக்கமாக இருந்து வந்தார்.

இப்படி இந்தியாவில் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியையே ஒரு சொல்லில் கட்டுப்படுத்தும் இந்த ரமேஷ் பாய் ஓசா குஜராத் மாநிலம் தேவ்கா என்ற கிராமத்தில் 1957ல் பிறந்தார். ரஜோலாவில் உள்ள சமஸ்கிருத பள்ளியில் தொடக்க கல்வியை பயின்றார். அதன்பிறகு மும்பை சென்று படிப்படிப்பை முடித்தார். முன்னதாக அவர் தன 13வது வயதில் ஸ்ரீமத் பகவத் கீதையில் தனது முதல் சொற்பொழிவை நடத்தினார். ரமேஷ் பாய் ஓசா ஒரு சிறந்த ஆன்மீக பேச்சாளர். இவருக்கு குஜராத், மகராஷ்டிராவில் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த ரமேஷ் பாய் ஓசா முகேஷ் அம்பானிக்கு மட்டுமின்றி அவரது சகோதரர் அனில் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்களுக்கு ஆன்மீக குருவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications