ரூ 250 கோடியில் சொகுசு வீடு.. மகள் பெயரில் எழுதி வைக்கும் ரன்பீர் கபூர்.. பணக்கார குழந்தையாகும் ராஹா
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், மும்பையில் பாந்த்ராவில் உள்ள தனது ரூ 250 கோடி மதிப்பிலான பங்களாவை தனது மகள் ராஹா பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ராஹா கபூர் என பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கெனவே ரன்பீருக்கும் ஆலியாவுக்கு பாந்த்ராவில் 4 பிளாட்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ 60 கோடியாகும். இந்த நிலையில் ஷாரூக் கான், அமிதாப் பச்சனின் வீடுகளை போல் ஒரு சொகுசு வீட்டை கட்ட வேண்டும் என ரன்பீர் கபூருக்கு ஆசை இருக்கிறது.
இந்த நிலையில் மும்பையில் பாந்த்ராவில் தனது தாய், தந்தைக்குச் சொந்தமான ஒரு இடத்தில்தான் ரன்பீர் கபூர் வீடு கட்டி வருகிறார். சுமார் 250 கோடி மதிப்பில் கட்டி வருகிறார். அதற்கு ராஹாவின் பெயர் சூட்டவும் ரன்பீர் முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் அந்த வீட்டை தனது மகளின் பெயரில் எழுதி வைக்கவும் ரன்பீர்- ஆலியா தம்பதி முடிவு செய்துள்ளனராம்.
இதற்காக தனது தாய், தந்தை பெயரில் இருக்கும் நிலத்தின் பெயரை தனது குழந்தையின் பெயருக்கு மாற்ற போகிறாராம். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் இந்தியாவில் பணக்கார பாலிவுட் குழந்தை ராஹா கபூராகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள். ராஹாவின் பாட்டி நீது கபூர்தான் அந்த இடத்தின் உரிமையாளராவார்.
தனது கணவரும் மறைந்த நடிகருமான ரிஷி கபூரின் அனைத்து சொத்துகளுக்கும் நீது இணை உரிமையாளர் ஆவார். ஏற்கெனவே நீது பெயரில் ரூ 15 கோடி ஆரம்பரமான வீடு உள்ளது. வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் நீது கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட், குழந்தை ராஹா ஆகியோர் ஒரே வீட்டில் தங்கி கபூர் குடும்பத்தினர் ஆவர்.
இந்த நிலையில் ரூ 250 கோடியில் பங்களா மட்டுமில்லாமல் ரூ 8 கோடியில் ஸ்வான்கி ரக காரையும் ரன்பீர் வாங்கியுள்ளார். அந்த காரில் ரன்பீர்- ஆலியா பட் வலம் வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. ரன்பீர் கபூர் ராமாயணா மற்றும் அனிமல் பார்க் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், ஜிக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடைய குழந்தைக்கு ஒரு வயதாகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications