மீண்டும் அடிக்குது யோகம்.. வீட்டு லோன் EMI வட்டி குறைகிறது.. ரெப்போ ரேட்டை மீண்டும் மாற்றும் ஆர்பிஐ!
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது அடுத்த நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) குறைத்து, முக்கிய விகிதத்தை 5 சதவீதமாக கொண்டுவரும் வாய்ப்புள்ளது என யூனியன் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இது தொடர்பாக யூனியன் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதகமான மத்திய வங்கியின் கொள்கை வழிகாட்டுதலால், 2026 பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் 25 பிபிஎஸ் விகிதக் குறைப்பிற்குக் கட்டாயம் வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கி சாதகமான பணவீக்க நிலைமைகள் மற்றும் குறைவான அடிப்படை விலை அழுத்தங்கள் குறித்து பலமுறை குறிப்பிட்டுள்ளது. ஏறத்தாழ 50 பிபிஎஸ் தங்கத்தின் பணவீக்க தாக்கத்தை சரிசெய்தால், ஒட்டுமொத்த பணவீக்க அழுத்தங்கள் இன்னும் மிதமாகத் தோன்றும்.
2026 பிப்ரவரி அல்லது ஏப்ரலில் இறுதியாக 25 பிபிஎஸ் விகிதக் குறைப்புக்கு வாய்ப்புள்ளது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பணவீக்கத்திற்கு சாதகமான கொள்கை வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு, இறுதி விகிதக் குறைப்பின் காலத்தைக் கணிப்பது கடினம் என்றாலும், பிப்ரவரி 26 கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 5.0 சதவீதமாகக் குறைக்கும் சாத்தியத்தை நாங்கள் மறுக்க முடியாது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம்தான் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தது. பிப்ரவரி 2025 முதல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 125 அடிப்படை புள்ளிகள் குறைத்து, அதை 5.25% ஆக கொண்டு வந்துள்ளது. இது பொருளாதார செயல்பாடுகளைத் தூண்டும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா 8% மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ ரேட் குறைப்பு
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் வங்கித் துறையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார். எனினும், மாறிவரும் நிதி சூழலில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள Repo Rate வட்டி விகித குறைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அலையவிடாமல் அவர்களுக்கு உடனே பலனை வழங்க வேண்டும். அப்போதுதான் அதன் பலன்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இனி உங்கள் இஎம்ஐ குறையும்
RBI மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை புதிய வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் இந்த குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், அவர்களின் மாதாந்திர EMI குறையும் வாய்ப்புள்ளது. இந்த வட்டி விகித மாற்றங்கள் இந்த மாதம் செய்யப்பட்டாலும் அடுத்த மாதம் வசூலிக்கப்படும் இஎம்ஐயில் அமலுக்கு வரும்.
ஆனால் பல நிறுவனங்கள் இதுவரை இந்த மாற்றங்களுக்கான சார்ட்டை வெளியிட்டாலும் கடனாளிகளுக்கு அதை நோட்டிப்பை செய்யவில்லை. அதாவது கடனாளிகள் இந்த மாற்றம் காரணமாக இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால் வங்கிகள் இதில் இன்னும் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்கவில்லை.
கடனாளிகள் விருப்பம் இன்றி இதில் வங்கிகள் முடிவு எடுக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் HDFC உள்ளிட்ட சில வங்கிகள் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்டு இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்க உள்ளது. ஆனால் சில வங்கிகள் குறைக்கவில்லை. உங்கள் வங்கி இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்காத பட்சத்தில் நீங்கள் உங்கள் கிளையில் ஒரு கடிதம் எழுதி இரண்டில் ஒன்றை.. உங்களுக்கு விருப்பமான ஒன்றை குறைக்கும்படி கூற வேண்டும்.
வீட்டுக் கடன் EMI-யில் எவ்வளவு குறையும்?
ஒரு கடன் வாங்குபவர் 20 வருட காலத்திற்கு ₹50 லட்சம் கடன் எடுத்திருந்தால், மாதாந்திர வீட்டுக் கடன் EMI சுமார் ₹2,000 வரை குறையும். .
நீங்கள் ₹50 லட்சம் கடனை 20 வருடங்களுக்கு எடுத்திருந்தால், மாதாந்திர EMI-யில் சுமார் ₹1,960 வரை சேமிக்க முடியும். கடனின் ஆயுட்காலத்தில் சுமார் ₹4.7 லட்சம் வரை சேமிக்க முடியும்.
₹30 லட்சம் கடனை 20 வருடங்களுக்கு எடுத்த வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, மாத EMI-யில் சுமார் ₹1,176 குறையும். மேலும், கடன் வாங்குபவர்கள் தங்கள் EMI-களைக் குறைக்கலாம் அல்லது தற்போதுள்ள EMI தொகையைத் தொடர்ந்து செலுத்தி கடனின் tenure அதாவது காலத்தை குறைக்கலாம். இதன் மூலம் அதிக வட்டி சேமிக்க முடியும்.
இதன் பொருள், சமீபத்திய காலாண்டுகளில் வீடு வாங்கும் முடிவை தாமதப்படுத்தியவர்கள், இப்போது தங்கள் கனவு இல்லத்தை வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர்கள் ₹50 லட்சம் வீட்டுக் கடனுக்கு மாத EMI-யில் சுமார் ₹3,800 முதல் ₹4,000 வரை நிவாரணம் பெறுவார்கள்.
ரிசர்வ் வங்கியின் இந்த ரெப்போ விகித குறைப்பு, வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. EMI தொகையில் கணிசமான அளவு குறையும் என்பதால் வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது ஒரு சாதகமான நேரமாகும்.












Click it and Unblock the Notifications