ஒண்ணா ரெண்டா? சரவெடி கொளுத்தும் ரிலையன்ஸ் ஜியோ.. அடுத்தடுத்து வருது.. சர்ப்ரைஸ் கொடுத்த அம்பானி!
மும்பை: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. ஜியோ AI கிளவுடு, ஜியோ போன்கால் AI, ஜியோ பிரெய்ன் என அடுத்தடுத்து சரவெடிகள் வர இருக்கின்றன. இந்த செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் பற்றிய விளக்கமும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஜியோ யூசர்கள் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனி ஜியோ பயனர்களுக்கு 100 ஜி.பி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். யூசர்கள் தங்கள் எல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கங்களையும் இங்கே சேமித்து வைக்கலாம். இங்கே சேமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மேலும் சிலருக்கு 100 ஜி.பியை விட அதிக ஸ்டோரேஜ் தேவைப்படலாம். அவர்களுக்கும் மலிவு விலையில் திட்டங்கள் வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி உறுதியளித்தார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாயிலாக விரைவில் கொண்டுவரப்படவுள்ள திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் (Jio Brain) தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்தார் முகேஷ் அம்பானி. இது சக்திவாய்ந்த ஜெனரேட்டிவ் AI மாடல்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதாக உறுதியளிக்கிறது என்று தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 100 ஜி.பி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் 'ஜியோ ஏஐ கிளவுட்' வரவேற்பு சலுகையைத் தொடங்குவதற்கான திட்டமிடல் தீபாவளி முதல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஜியோ 8 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய மொபைல் டேட்டா நிறுவனமாக மாறியுள்ளது. அயராது உழைத்து, சரியான பாதையில் உழைத்ததன் பலன்தான் இதுவரை நாம் சாதித்தவை. நமது உண்மையான வளர்ச்சி இன்னும் வரவில்லை. நமது கடந்த காலத்தை விட நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார் முகேஷ் அம்பானி.
ஆகாஷ் அம்பானி ஜியோ செட் டாப் பாக்ஸ்களுக்கான உள்நாட்டு இயங்குதளமான ஜியோ டிவி ஓஎஸ் அறிமுகப்படுத்தினார். ஜியோ டிவியில் 860 சேனல்கள் வரை காணலாம். அவற்றில் இனி 7 நாட்கள் வரையிலான முடிந்த நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம் என்றும் அறிவித்தார் ஆகாஷ் அம்பானி.

Jio Phonecall AI வசதி பற்றி ஆகாஷ் அம்பானி பேசினார். Jio போன்கால் AI ஆனது, ஜியோ கிளவுட்டில் எந்த காலையும் ரெக்கார்ட் செய்து சேமித்து, தானாக டிரான்ஸ்கிரிப்ட் செய்ய முடியும், அதாவது இந்த செயற்கை நுண்ணறிவு செயலி, வாய்ஸ் காலில் உள்ள வாய்ஸை டெக்ஸ்ட் ஆக மாற்றும். அதை வேறொரு மொழியில் மொழிபெயர்க்கவும் முடியும். முக்கியமான குரல் உரையாடல்களை எளிதாக அணுக இது அனுமதிக்கிறது, அவற்றைப் பகிரக்கூடியதாகவும், எல்லா மொழிகளிலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் ஆக்குகிறது, அதுவும் சில க்ளிக்குகளில் எனக் கூறியுள்ளார் ஆகாஷ் அம்பானி.
ஆக, ஜியோ, எதிர்காலத்திற்காக பிரமாண்டமான செயற்கை நுண்ணறிவு திட்டங்களுடன் வருகிறது. இந்த வசதிகள் முதலில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications