ஷாக்! பெண் மீது மளமளவென விழுந்த அரிசி மூட்டைகள்! ஜெட் வேகத்தில் செயல்பட்டு மீட்ட ஊழியர்கள்.. வீடியோ
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சரிந்து பெண் ஊழியர் மீது விழுந்தது. சுமார் 30 - 40 அரிசி மூட்டைகள் பெண் மீது விழுந்த நிலையில், அங்குள்ள ஊழியர்கள் அந்த அரிசி மூட்டைகளை ஜெட் வேகத்தில் சில நொடிகளில் தூக்கி வீசி பெண்ணை மீட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள், பெண் ஊழியர் மீது சரிந்து விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் மீட்டுள்ளனர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள வஷி பகுதியில் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு (APMC) வளாகத்தில் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெட்டில் நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு இடைவெளி விடப்பட்டு வரிசையாக அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

மூட்டைகளுக்கு அடியில் சிக்கிய பெண்: அந்த மார்க்கெட்டில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். வழக்கம் போல சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது திடீரென்று அரிசி மூட்டைகள் அசைந்தன. இதைக் கவனித்து அந்த பெண் சுதாரிப்பதற்குள் மூட்டைகள் நொடிப்பொழுதில் பெண் மீது விழுந்தது. பல மூட்டைகள் விழுந்ததில், மூட்டைகளுக்கு கீழே பெண் சிக்கிக் கொண்டார்.
துரிதமாக செயல்பட்ட ஊழியர்கள்: உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அந்த பெண்ணை மீட்க சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் வேகவேகமாக வந்து அரிசி மூட்டைகளை ஜெட் வேகத்தில் தூக்கி வீசினர். 30 - 40 அரிசி மூட்டைகளை சில நொடிகளில் தூக்கி வீசி பெண்ணை மீட்டனர். காயம் அடைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நெட்டிசன்கள் பாராட்டு: லேசான காயமே அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உயிரை காப்பாற்ற சமயோசிதமாக செயல்பட்டு ஊழியர்கள் ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பெண்ணை காப்பற்ற விரைந்து செயல்பட்ட விதத்தை பாராட்டி வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications