அம்பானி வீட்டுப் பூஜையில் பாப் பாடகி ரிஹானா! பரதநாட்டியமும் கற்று கொண்டு அசத்தல்!
மும்பை: சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாப் பாடகியும், தொழிலதிபருமான ரிஹானா (Rihanna), தனது 'ஃபென்டி பியூட்டி' (Fenty Beauty) அழகுசாதனப் பிராண்டின் இந்திய அறிமுக விழாவிற்காகத் தற்போது மும்பை வந்துள்ளார். அவரது அம்பானி வீட்டு பூஜையிலும் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தினரின் புகழ்பெற்ற 'அன்டிலியா' இல்லத்திற்கு ரிஹானா மற்றும் அவரது குழுவினர் வருகை தந்தனர். அவர்களை ஈஷா அம்பானி, ஸ்லோகா மேத்தா, ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
அவர் இல்லத்திற்குள் நுழையும்போது, இந்தியக் கலாச்சாரத்தை உணர்த்தும் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வருகையின்போது, ரிஹானா வெறும் விருந்தினராக மட்டுமல்லாமல், இந்தியச் சடங்குகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
ஆரத்தி: அம்பானி வீட்டுத் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்து கொண்டு அவர் ஆரத்தி எடுத்தார்.
மலர்கள் தூவி ஹோலி: 'பூலோன் கி ஹோலி' (Phoolon ki Holi) எனப்படும் பூக்களால் விளையாடும் விழாவில் பங்கேற்று, அம்பானி குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் நடனமாடினார்.
சிறப்பு மதிய உணவு: இதன்பின், அவருக்காகத் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய இந்திய மதிய உணவை அவர் குடும்பத்தினருடன் அமர்ந்து அருந்தினார்.
'ஃபென்டி பியூட்டி கி ஹவேலி' தனது வணிகப் பிராண்டான ஃபென்டி பியூட்டி, ரிலையன்ஸ் ரீடெய்ல் (Reliance Retail) நிறுவனத்தின் 'டிரா' (Tira) தளத்துடன் இணைந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் அமைக்கப்பட்ட 'ஃபென்டி பியூட்டி கி ஹவேலி' கடையின் திறப்பு விழா மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஜான்வி கபூர், மனிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
#WATCH | Global icon Rihanna and her guests visited the Ambani family at their home for lunch. Isha, Shloka, Radhika and Anant Ambani welcomed Rihanna for an afternoon immersed in Indian dance, culture and art.
— ANI (@ANI) April 26, 2026
Reliance Retail has brought Rihanna to India to celebrate Fenty… pic.twitter.com/h70E12nn9P
இந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட சில சுவாரசியமான வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
சுக்ரியா: நன்றி என்பதை இந்தியில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று கேட்டறிந்த ரிஹானா, பின்னர் ரசிகர்களைப் பார்த்து 'சுக்ரியா' என்று சிரித்தபடி கூறினார்.
போஸ்: புகைப்படக் கலைஞர்களுடன் சகஜமாகப் பழகி, அவர்களுடன் இணைந்து போஸ் கொடுத்த அவரது எளிமை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தின் முத்திரைகளை (Mudras) அவர் ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிபுணர் அவருக்கு முத்திரைகளைச் செய்து காட்ட, ரிஹானாவும் அதை மிக நேர்த்தியாகப் பின்பற்றிச் செய்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஏற்கனவே 2024-ல் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணக் கொண்டாட்டங்களில் பங்கேற்றுப் பெரும் கவனத்தை ஈர்த்த ரிஹானா, தற்போது தனது வணிகத் தொடர்பை இந்தியாவுடன் வலுப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications