குறிவைத்து முஸ்லிம்களை கொன்ற ஆர்பிஎப் வீரர்.. மனநல பிரச்சனை இல்லை! குற்றப்பத்திரிகையில் அம்பலம்
மும்பை: ஜெய்பூர் - மும்பை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பயணிகளையும், ஆர்பிஎப் எஸ்.ஐ.-யையும் சுட்டுக்கொன்ற ஆர்பிஎப் வீரர் சேத்தன் சிங் நல்ல புத்தி சுவாதீனத்துடனே இருந்தார் என ரயில்வே போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நோக்கி கடந்த ஜூலை 31 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் ஏராளமான பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டு இருந்தது. மகாராஷ்டிராவின் வைதர்னா ரயில் நிலையத்தை கடந்து பால்கர் அருகே ரயில் சென்றுகொண்டு இருந்தபோடு அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் 4 பயணிகளையும், தனது உயர் அதிகாரியையும் சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேத்தன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது எஸ்ஐ டீக்காராம் மீனா என்ற பட்டியல் சமூகத்தை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் சேத்தன் சிங் டீக்காராம் மீனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதை தொடர்ந்து அந்த ரயிலில் பயணித்த காதர் பன்புர்வாலா (58), அக்தர் அப்பாஸ் அலி (48), சையது சைபுத்தீன் (43) ஆகிய பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
முதலில் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ. டீக்காராம் மீனாவை கொன்ற சேத்தன் சிங், பின்னர் பி 5 என்ற பெட்டியில் உள்ள ஒரு பயணியை சுட்டுக் கொலை செய்து உள்ளார். அங்கிருந்து பி-6 என்ற பெட்டிக்கு அவர் சென்ற. அங்குள்ளவரையும் கொடூரமாக கொலை செய்த சேத்தன் சிங், அதன் தொடர்ச்சியாக பி-5 மற்றும் பி-6 பெட்டிகளுக்கு இடையே இருந்த பேண்ட்ரி காருக்கு அருகே சையத் என்ற பயணியை துப்பாக்கி முனையில் கூட்டி சென்று சுட்டுக்கொலை செய்தார் சேத்தன் சிங்.
சையதை கொன்ற பின், அவரது உடலை கீழே போட்டுவிட்டு, "நான் பாகிஸ்தானோடு தொடர்பில் இருந்தவர்களையே கொன்றேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் ஓட்டு போட வேண்டும்." என்று மிரட்டினார். 4 பேரையும் சேத்தன் சிங் கொலை செய்த பின்னர் ரயில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது சேத்தன் சிங்கை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். முதலில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே விளக்கம் அளித்தது.
ஆனால், முஸ்லிம் பயணிகள் அமர்ந்திருக்கும் இடங்களுக்கு தேடி சென்று தாடி வைத்தவராக பார்த்து அவர்களை சுட்டுக் கொன்றவர் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை மூத்த மண்டல பாதுகாப்பு ஆணையர், ஆர்பிஎப் வீரர் சேத்தன் சிங்கை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மீதான விசாரணை மும்பை போரிவிலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 1206 பக்கங்களை குற்றப்பத்திரிகையை ரயில்வே போலீஸ் தாக்கல் செய்து இருக்கிறது. சாட்சிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கள், சிசிடிவி காட்சிகளை கோர் முன் போலீஸ் தாக்கல் செய்து இருக்கிறது. அதில் 3 பயணிகளையும், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ.-யையும் சுட்டுக் கொலை செய்த சேத்தன் சிங் நல்ல புத்தி சுவாதீனத்துடனே இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தான் என்ன செய்கிறோம் என தெரிந்தே அவர் செய்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை ஷெசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் ரயில்வே போலீசார் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications