சைஃப் அலிகானுக்கு மட்டும் ரூ 25 லட்சம் இன்சூரன்ஸ் அப்ரூவல்! சாதாரண மக்களுக்கு? இணையத்தில் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மருத்துவ கட்டணமான ரூ 25 லட்சத்தை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் சில மணி நேரங்களில் ஒதுக்கீடு செய்தது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் இன்சூரன்ஸை கிளைம் செய்ய படாதபாடு படும்போது சொளையாக ரூ 25 லட்சத்தை எப்படி உடனடியாக அப்ரூவல் செய்தன என இணையத்தில் கேள்வி எழுந்துள்ளது.

மும்பை பாந்த்ராவில் உள்ள சைஃப் அலிகானின் வீட்டுக்கு கடந்த 15ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மர்மநபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவரை பார்த்து அவரது வீட்டில் பணியாற்றும் பெண் ஒருவர் சப்தமிட்டுள்ளார்.

saif ali khan mumbai crime

உடனே அந்த மர்மநபர் அந்த பெண்ணை தாக்கினார். இதனால் அவரது அலறல் சப்தத்தை கேட்ட சைஃப் அலிகான் என்னவென பார்த்த போது அந்த மர்ம நபருடன் பணிப்பெண் போராடிக் கொண்டிருப்பதை பார்த்தார்.

உடனே அதை தடுக்க முயன்ற போது சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவருக்கு 6 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும் ஒரு காயம் அவருடைய முதுகு தண்டுவடத்திற்கு அருகே உள்ளது. கத்தியால் குத்தி விட்டு ஓடிய நபர் யார் என தெரியவில்லை, அவர் எப்படி உள்ளே வந்தார் என்பதும் கேள்வியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமுடன் இருந்து பிறகு வீட்டிற்கும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் சைஃப் அலிகான், தன்னை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்த ஆட்டோ டிரைவரை அழைத்து பாராட்டினார். மேலும் அவருக்கு ரொக்கமாக சன்மானத்தையும் வழங்கினார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த விஜய் தாஸ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரும் சைஃப் அலிகான் வீட்டில் திருடும் நோக்கில் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார்.

விஜய் தாஸ் 6 மாதங்களாக சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து பல்வேறு இடங்களில் பெயரை மாற்றிக் கொண்டு பணியாற்றியது தெரியவந்தது. அந்த விஜய் தாஸ், சைஃப் அலிகானின் வீட்டை சுற்றி 35 கி.மீ. தூரத்தில் உள்ள கசர்வதவல்லி என்ற இடத்தில் பிடிபட்டார். அவர் தானேவில் பார் ஊழியராக பணியாற்றியது தெரியவந்தது.

இந்த நிலையில் சைஃப் அலிகானுக்கு இன்சூரன்ஸ் தொகை கிளைம் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரை, தங்குமிடம் , மருத்துவர்கள், செவிலியர்களின் கட்டணம் என ரூ 25 லட்சம் பில் வந்தது.

இந்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியது. அவர்கள் அனுப்பிய சில மணி நேரத்தில் ரூ 25 லட்சமும் பைசா பாக்கியில்லாமல் ஏற்பதாக அப்ரூவல் வந்துவிட்டது. இது இணையத்தை அதிர செய்துள்ளது.

சாதாரண நபர்கள் சில ஆயிரங்களுக்காகவும் லட்சங்களுக்காகவும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகினால் கிட்டதட்ட வாழ்க்கையையே வெறுக்கும் அளவுக்கு ரிஜெக்ட் செய்து அனுப்புவார்கள். அந்த ரிப்போர்ட், இந்த ரிப்போர்ட் என கேட்டு கேட்டு இந்த பிராசஸ் ஆவதற்கே நீண்ட நேரம் ஆகும்.

அதிலும் இது போல் வெட்டுக் குத்து என்றால் இன்சூரன்ஸ் நிறுவனம் எஃப்ஐஆர் காப்பியை கேட்பார்கள். ஆனால் சைஃப் அலிகான் விவகாரத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் எதையும் கேட்காமல் உடனடியாக அப்ரூவல் செய்ததாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+