ரூ.500 கோடி சொத்துக்கள்? மார்வாடி பெண்ணுக்கு மணமகன் தேவையாம்.. சமூகம் பெரிய இடமோ? ரெடியான நெட்டிசன்
மும்பை: ரூ.500 கோடி சந்தை முதலீடு கொண்ட மும்பையைச் சேர்ந்த ஒரு வர்த்தக குடும்பம், தங்கள் மகளுக்கு மணமகனைத் தேடுவதாகக் கூறும் ஒரு வினோதமான திருமண விளம்பரம் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
மணமகள் தேவை விளம்பரம் என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் தோற்றம், கல்வி, மற்றும் தொழில் போன்ற விபரங்களை தான் பகிர்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் வரத்துவங்கிவிட்டன. இவைகள் எல்லாம் சோசியல் மீடியாவிலும் வைரலாகின்றன.

செய்தித்தாள் விளம்பரம் - மணமகள் தேவை
சமீபத்தில், மீரட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்தித்தாளில், தனக்கு திருமண வரன் வேண்டி ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில், "நான் நன்றாக படித்திருக்கிறேன். அழகாக இருப்பேன். நான் மிகவும் திறமைசாலி. பங்குச்சந்தை முதலீட்டாளராக இருக்கிறேன். எனக்கு ஆண்டுக்கு 29 லட்சம் ரூபாய் ஊதியம் வருமானம் கிடைக்கிறது. என்னுடைய முதலீடு வருடந்தோறும் 54 சதவீதம் என்ற அளவில் காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைகிறது.
எனக்கு மணமகளாக வர விருப்பமுள்ளவர்களுக்கு, பாதுகாப்பான முதலீடுகள் குறித்து, ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
முதலீடுகள் வருடந்தோறும் வளர்ச்சி
வழக்கமாக வரம் தேடும்போது, மணமகனின் படிப்பு, ஜாதி என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும்.. ஆனால் இந்த இளைஞர் தன்னுடைய வருமானத்தை குறிப்பிட்டதோடு, அது வருடந்தோறும் எவ்வளவு வளர்ச்சியடைய போகிறது? என்ற விவரங்களையும் விலாவரியாக குறிப்பிட்டிருந்தது இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
இந்த மாப்பிள்ளைக்கு பெண் கிடைத்ததா? என்று தெரியவில்லை. ஆனால், இன்னொரு திருமண விளம்பரம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. "ரெடிட்" வெப்சைட்டில் இந்த விளம்பரம் ஷேர் செய்யப்பட்டிருந்தது.
குஜராத்தி மணமகன் தேவை
அந்த விளம்பரத்தில், "ரூ.500 கோடி சந்தை முதலீடு கொண்ட வர்த்தக குடும்பத்தில் உள்ள 28 வயதான பெண்ணின் திருமணத்திற்கு பொருத்தமான மார்வாடி/குஜராத்தி மணமகனை எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் "சந்தை முதலீடு" என்ற வார்த்தை தான் பலருக்கும் திகைப்பை தந்து வருகிறது.
இந்த விளம்பரத்தை பார்த்த இணையவாசிகள், தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "500 கோடிக்கும் மேற்பட்ட சொத்து மதிப்புள்ள குடும்பங்கள் என்றாலே, ஹைகிளாஸ்தான்.. இவர்கள் எல்லாம், இப்படி விளம்பரம் செய்ய தேவையேயில்லையே?" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இன்னொரு நபரோ, "அவரது தொடர்பு எண்ணை எனக்கு அனுப்புங்கள்" என்று கேட்டுள்ளார்.
மற்றொரு நபரோ, "இது ஒத்த அந்தஸ்துள்ள மணமகனை பெறுவதற்கான ஒரு தந்திரம்.. நான் மார்வாடிக்கு மாறத் தயாராக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் இந்த, மணமகன் தேவை விளம்பரம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications