தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்.. 2-ஆவது முறையாக தமிழில் ட்வீட்
மும்பை: முழங்கை கவசத்தை மாற்றுமாறு ஆலோசனை அளித்த சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன். அவரை சந்திக்க உதவுங்களேன் என கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தமிழில் ட்வீட் போட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டு அசத்தி வருகிறார். பொங்கல் வாழ்த்து தொடங்கி அண்மையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் வரை அனைத்தையும் தமிழில் ட்வீட் போட்டிருந்தார்.
இவரது தமிழை படிப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் அந்த வரிசையில் கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் தமிழில் ட்வீட் போட்டுள்ளார்.
|
முழங்கை கவசம்
அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard (முழங்கை கவசம்) பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.

வீடியோ இணைப்பு
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் ஆங்கிலத்திலும் ட்வீட் போட்டுள்ள சச்சின் அதில் வீடியோவையும் இணைத்துள்ளார்.

தமிழில் ரஜினிக்கு வாழ்த்து
சச்சின் முதல்முறையாக ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி ட்வீட் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது 2-ஆவது முறையாக இந்த ஊழியரை தேடி ட்வீட் போட்டுள்ளார். இது தற்போது வைரலாகியுள்ளது.
|
கேலி செய்யும் நெட்டிசன்கள்
சச்சினின் இந்த ட்வீட்டை சிலர் சீரியஸாகவும் சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர். அதில் ஒருவர் நெட்டிசன்களை கேட்பதற்கு பதில் நீங்கள் நேரடியாக ஹோட்டல் நிர்வாகத்தையே கேட்டு விடலாம். அவர்கள் சரியாக வழிகாட்டுவார்கள். ஆனால் இந்த ட்விட்டரில் உங்களை சிலர் கேலி செய்கிறார்கள் என அந்த நெட்டிசன் சச்சினுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications