நெகிழ்ச்சி.. பயிற்சியாளர் உடலை தோளில் சுமந்த சச்சின் டெண்டுல்கர்
Recommended Video

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளர் மாகாந்த் அச்ரேக்கர் காலமானார். அவருக்கு வயது 87. இன்று அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது, அச்ரேக்கர் உடல் வைக்கப்பட்ட ஸ்ட்ரக்ச்சரை சச்சின் தனது தோளில் சுமந்து சென்றார். அச்ரேக்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய இடத்தில் சச்சின் சோகமே வடிவானவராக காணப்பட்டார்.
சச்சினின் 11ஆவது வயதில், அச்ரேக்கர் அறிமுகமானார். பிரவீன் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து போன்ற வீரர்களுக்கும் அச்ரேக்கர், பயிற்சியளித்த போதிலும், துரோணாச்சாரியார் விருது பெற்ற அச்ரேக்கருக்கு, அர்ஜுனன் போன்ற திறமையான சீடர், சச்சின் டெண்டுல்கர்தான்.

மும்பை நகரின் தெருக்களில் அச்ரேக்கர் ஸ்கூட்டரில் அமர்ந்து பயணித்து பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் களம் கண்டவர் சச்சின். அன்பு பிள்ளையை போல சச்சினை நடத்தினாலும், ஆசிரியராக இருந்து கடிந்துகொள்ளவும் தவறியதில்லை.
You will always be remembered as one of the finest cricketing minds, #RamakantAchrekar sir. Thank you for giving us the gift that is @sachin_rt and inspiring millions others. You will be missed. Thoughts & prayers with the family. pic.twitter.com/zyJLr528VM
— Suresh Raina🇮🇳 (@ImRaina) January 2, 2019
ஒருமுறை பயிற்சியில் ஈடுபடாமல், அரட்டையடித்துக்கொண்டிருந்த சச்சினை பார்த்த அச்ரேக்கர், கன்னத்திலேயே பளார் விட்டு, பயிற்சிக்கு போகச்சொன்னாராம். இதை தனது சுயசரிதை புத்தகத்தில் சச்சினே குறிப்பிட்டுள்ளார்.
Sachin Tendulkar and Vinod Kambli took part in a funeral procession for their coach Ramakant Achrekar sir from Shivaji Park to a nearby Crematorium!💔#CoachInPeace😢🙏❤@sachin_rt @vinodkambli349 pic.twitter.com/06k0vN63iH
— Er Saurabh Jha🏏🇮🇳 (@SaurabhTen) January 3, 2019
மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கையின் அடிநாதமாக இருந்தவர் அச்ரேக்கர். இந்த நிலையில்தான், தனது குருநாதரை, தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார், கிரிக்கெட் கடவுள். கடவுளுக்கே குரு என்றால் சும்மாவா!
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications