சைஃப் அலிகானை குத்திவிட்டு.. ஜாலியாக செல்போன் கடையில் பர்சேஸ் செய்த மர்ம நபர் – சிசிடிவி வெளியீடு
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தன் வீட்டில் வைத்தே மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை புதிய சிசிடிவி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில அந்த நபர் ஹாயாக அருகில் உள்ள மொபைல் கடைக்கு சென்று பர்சேஸில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகர்களுக்கு இது சோதனையான காலம். பிரபல அரசியல்வாதி பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பிறகு அவருடன் தொடர்பில் இருந்து நடிகர் சல்மான்கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பில் பகிரங்க கொலை மிரட்டல் விடப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்தே பாலிவுட் மீளவில்லை.

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் உள்ள அப்பார்ட்மென்டில் 11வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அவர் தன் வீட்டில் ஒரு மர்ம நபரால் தாக்கப்பட்டார். அப்போது சைஃப் அலிகானின் உடலின் பல பாகங்கள் பிளேடால் குத்தப்பட்டதில் காயம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் தொற்றிக் கொண்டது.
உடனடியாக கார் எடுக்க முடியாததால் சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்க்கும் காத்திருக்க முடியாத நிலை இருந்தது. ரத்தம் அதிகளவு வெளியேறியதால் தாமதம் செய்யவேண்டாம் என்று கருதி அவர் உடனடியாக ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகானுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு அவர் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
உடை முழுவதும் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பை காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தாக்குதல் நடத்திய நபர் குறித்து ஏற்கனவே ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மும்பை காவல்துறையினர் மேலும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சைஃப் அலிகான் வீட்டு அருகிலேயே ஐக்ரா என்ற பெயரில் ஒரு மொபைல் கடை உள்ளது. அந்த மர்ம நபர் சைஃப் அலிகானை குத்திவிட்டு, எந்த பதற்றமும் இல்லாமல் அந்த மொபைல் கடைக்கு சென்று ஹாயாக ஹெட்போன் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
சைஃப் அலிகான் வீட்டில் சம்பவம் நடைபெற்ற ஆறு மணி நேரத்துக்கு பிறகு அந்த நபர் அதே நீலநிற சட்டை மற்றும் கறுப்பு நிற பேக் பேக் மாட்டிக் கொண்டு அந்த மொபைல் கடைக்கு சென்றுள்ளார். அந்த மொபைல் கடைக்காரரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த மொபைல் கடை உரிமையாளர் கூறுகையில், “அந்த சம்பந்தப்பட்ட நபர் 50 ரூபாய்க்கு ஹெட்போன் வாங்கினார். இதற்காக அந்த நபர் 100 ரூபாய் கொடுத்தார். நான் ஹெட்போனுக்கான கட்டணம் போக மீதி 50 ரூபாயை திருப்பிக் கொடுத்தேன். அவர் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் என்று எனக்கு தெரியாது.” என்றார்.
இந்த வீடியோவுடன் அந்த மர்ம நபர் தொடர்பான 4 வீடியோக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு சைஃப் அலிகானின் வீட்டுக்குள் நுழைந்து அவர் ஆக்சா பிளேடால் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதில் அவருக்கு ஆறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications