சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் எதை திருடிச் சென்றார்? கரீனா கபூர் பரபரப்பு வாக்குமூலம்
மும்பை: நடிகர் சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் எதையும் திருடிச் செல்லவில்லை என அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கரீனா கபூர், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: தாக்குதல் நடத்தியவர் ஆக்ரோஷமாக இருந்தார். அவர் சைஃப்பை மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டே இருந்தார். எங்களுக்கு சைஃப்பை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில்தான் கவனம் இருந்தது.

இதனிடையே அந்த நபர் தப்பியோடிவிட்டார். அவர் எங்கள் வீட்டில் இருந்து எதையும் திருடிச் செல்லவில்லை என கரீனா கபூர் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்தான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது மனைவி கரீனா கபூர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு கடந்த 16ஆம் தேதி அதிகாலை வந்த மர்ம நபர் திருட முயற்சித்த போது அவரை சைஃப் அலிகான் தடுத்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மர்ம நபர் சைஃப்பை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து சைஃப்பை உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து தப்பியோடிய நிலையில் அவரை பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications