இந்தி பிக்பாஸில் திடீரென சட்டையை கழற்றிய சல்மான் கான்! கண்ணிலும் உடல்மொழியிலும் அத்தனை கோபம்!
மும்பை: இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் சல்மான் கான் திடீரென சட்டையை கழற்றிவிட்டு சிக்ஸ் பேக்கை காட்டி, விமர்சனங்களுக்கு கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு ,கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியை சல்மான்கானும், தெலுங்கை நாகார்ஜுனாவும் கன்னடத்தை கிச்சா சுதீப்பும், மலையாளத்தை மோகன்லாலும் தமிழை விஜய் சேதுபதியும் நடத்தி வருகிறார்கள்.

இந்தி பிக்பாஸ் 20ஆவது சீசனை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான், வயதான தோற்றத்தில் இருக்கிறார், உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இருக்கும் வீட்டிற்கு சென்ற சல்மான் கான், அவர்களது செயல்பாடுகளை சுட்டிக் காட்டினார். மேலும் தன்னை டிரோல் செய்வோருக்கும் பதிலடி கொடுத்தார்.
அப்போது திடீரென தொப்பியையும் சட்டையையும் ஆவேசமாக கழற்றினார். இதன் மூலம் முடி உதிர்வு, வயது முதிர்வு, உடல் எடை உள்ளிட்ட டிரோல்களுக்கு பதிலடி கொடுத்தார். அப்போது போட்டியாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து அவர் பேசுகையில், நீங்கள் எதை டிரோல் செய்ய நினைக்கிறீர்கள், எதை உங்களுக்கு டிரோல் செய்ய வேண்டும். எனக்கும் இந்த டிரோல்கள் நடந்துள்ளன, சல்மான்கான் குணமாகிவிட்டார், வாருங்கள் அவரை விமர்சிப்போம், இப்போது டிரோல் செய்யுங்கள் என ஆவேசமாக பேசினார் சல்மான்.
மேலும் அவர் பேசுகையில், முதலில் உங்களை பாருங்கள், பிறகு மற்றவர்களை விமர்சியுங்கள், உங்கள் பெற்றோர்களின் உடல்நிலையில் அக்கறை செலுத்துங்கள். உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள் என தெரிவித்தார்.
யூடியூபர் ஸ்காட் தனது கேமிங் சமூகத்தை பற்றி பேசிய போது சல்மான் கான், பிறரை உருவக் கேலி செய்வது , டிரோல் செய்வத மனித மனநிலையின் தாழ்வு மனப்பான்மையையும் வளர்ப்பையுமே காட்டுகிறது என கண்டித்தார்.
இவர் சட்டையை கழற்றி கொந்தளித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீக் என்ட் வாரத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அதில் டிரோல் கலாச்சாரத்தை கண்டித்து பேசினார். மேலும் 60 வயதிலும் தான் ஃபிட்டாக இருப்பதையும் அவர் காட்டினார்.
கடந்த சீசன் 13-இல் போட்டியாளர்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்காமல் இருந்ததை கண்டித்து சல்மானே கானே பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று கழிப்பறையையும் சமையலறையையும் சுத்தம் செய்தார்.
இந்த இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசன் முதலே இவர்தான் நடத்தி வருகிறார். கடந்த சீசனில் தமிழகத்தை சேர்ந்த குக் வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகா கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா, "நான் நடித்த 2 படங்கள் ஃபிளாப்" என்றார். அதற்கு சல்மான், "நீங்கள் எத்தனை படங்களில் நடித்துள்ளீர்கள்" என கேட்டதற்கு ஸ்ருத்திகா, மொத்தமே ரெண்டுதான் என சொன்னதும் சல்மான் கான் குலுங்கி குலுங்கி சிரித்தார்.


Click it and Unblock the Notifications
