மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஜித் பவார் எங்க பக்கம் திரும்பி வந்துவிட்டார்... 5 ஆண்டுகள் எங்க ஆட்சிதான்... சஞ்சய் ராவத்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: என்சிபியில் போர்க்கொடி தூக்கிய அஜித் பவார் தங்கள் பக்கமே திரும்பி வந்துவிட்டதாக சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    அஜித் பவார் தலைமையில் என்சிபியை உடைத்து அதன் மூலம் பாஜக ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சிகள் கை கூடவில்லை.

    Sanjay Raut claims Ajit Pawar returns to Sena-Congress-NCP alliance

    இந்நிலையில் முதல்வர் பட்னாவிஸ் அரசு நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது துணை முதல்வர் பதவியை திடீரென அஜித் பவார் ராஜினாமா செய்துவிட்டார்.

    யாருடனும் ஒட்டவில்லை.. அப்போதே எழுந்த சந்தேகம்.. அஜித் பவாரை வைத்து 'கேம்' ஆடினாரா சரத் பவார்?யாருடனும் ஒட்டவில்லை.. அப்போதே எழுந்த சந்தேகம்.. அஜித் பவாரை வைத்து 'கேம்' ஆடினாரா சரத் பவார்?

    இதனால் மகாராஷ்டிராவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அஜித் பவார் எங்கள் பக்கம் திரும்பவும் வந்துவிட்டார்.

    உத்தவ் தாக்கரேதான் முதல்வராக பதவி ஏற்பார். அவரே 5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராக நீடிப்பார். சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிரப் போவதும் இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

    English summary
    Shiv Sena Senior leader Sanjay Raut has claimed that the NCP's revolt leader Ajit Pawar is now with Shiv Sena-Congress-NCP alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X