மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்று காணாத உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் யூடர்ன் போட்டு திரும்பியது!

Google Oneindia Tamil News

மும்பை: நாடு முழுவதும் பாஜக அபாரமாக வெற்றி பெற்று வருகிறது. இதனால் முதல் முறையாக சென்செக்ஸ் புள்ளிகள் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 298 புள்ளிகள் குறைந்து நிறைவு பெற்றது.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் கடும் குஷியில் உள்ளனர். இதையடுத்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து 40,054 பெற்றுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

பங்கு சந்தை வரலாற்றில் முதல்முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. அதுபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 ஆக உயர்ந்துள்ளது.

உயர்வு

உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 20 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.69. 45 ஆகியுள்ளது. தொடர்ந்து 4-ஆவது நாளாக இந்த உயர்வு காணப்படுகிறது.

298 புள்ளிகள்

298 புள்ளிகள்

காலையில் உச்சம் பெற்ற சென்செக்ஸ், திடீரென யூடர்ன் போட்டு கொண்டு மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்து 38,811 இல் வர்த்தகம் நிறைவு பெற்றது.

கிடுகிடுவென உயர்வு

கிடுகிடுவென உயர்வு

இது போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு பின்னர் பங்கு சந்தை புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sensex crosses 40000 mark first time in history after BJP leading in all over India. It touches 40,054.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X