வினோதம்.! பங்களா வாங்கிய ஷாருக் கானுக்கு ரூ.9 கோடியை தரும் மகாராஷ்டிர அரசு! என்ன காரணம் தெரியுமா?
மும்பை: பாலிவுட் பிரபலம் ஷாருக் கானுக்கு மாகராஷ்டிர அரசு இப்போது 9 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. ஷாருக் கான் பங்களா ஒன்றை வாங்கிய விவகாரத்தில் தான் மகாராஷ்டிர அரசு 9 கோடி ரூபாயைக் கொடுத்துள்ளது. வழக்கமாகப் பங்களாவை வாங்குவோர் தான் தொகையைத் தர வேண்டும். ஆனால் பங்களாவை வாங்கிய ஷாருக் கானுக்கு மகாராஷ்டிர அரசு எதற்காக ரூ.9 கோடியைக் கொடுத்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தி சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் ஷாருக் கான். கடந்த 2023ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனையைப் படைத்தது.

இப்படி பாலிவுட்டில் முக்கிய நட்சத்திரமாக உள்ள ஷாருக் கானுக்கு மும்பையில் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள் உள்ளது. பல பங்களாவை ஷாருக் கான் வாங்கியுள்ளார்.
ரூ.9 கோடி:
இதற்கிடையே மும்பையில் செல்வந்தர்கள் குடியிருக்கும் பாந்திரா பகுதியால் உள்ள மன்னத் பங்களாவை மகாராஷ்டிர அரசிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக் கான் வாங்கியிருந்தார். அப்போது அவர் அதிக கட்டணத்தைச் செலுத்தியதாகவும் இதன் காரணமாகவே இப்போது ஷாருக் கான் மகாராஷ்டிர அரசிடம் இருந்து ரூ.9 கோடியைத் திரும்பப் பெற உள்ளார். இந்த பங்களாவை வாங்கிய போது அதிகாரி கட்டணத்தைக் கணக்கிட்டதில் பிழை செய்தது கண்டறியப்பட்ட நிலையில், ஷாருக் கானுக்கு 9 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது.
மும்பையில் பாந்த்ரா மேற்கு பகுதியில் தான் ஷாருக் கானின் ஆடம்பர குடியிருப்பான மன்னத் உள்ளது. 2,446 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மன்னத் குடியிருப்பைக் கடந்த 2001ம் ஆண்டு ஷாருக் கான் குத்தகைக்கு எடுத்திருந்தார். அதன் பிறகு அந்த குடியிருப்பிலேயே ஷாருக் கான் தங்கி வந்தார்.
மன்னத் பங்களா:
இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டுக் குத்தகை முறையில் வாங்க விரும்பினார்கள். இதற்காக ஷாருக் கான் தரப்பு 25% ப்ரீமியம் தொகையைச் செலுத்த வேண்டி இருந்தது. அதன்படி சுமார் ரூ. 27.50 கோடியை ஷாருக் கான் செலுத்தினார். ஆனால், இந்த செயல்முறையின் போது கட்டணத்தைக் கணக்கிடுவதில் சிறு பிழை ஏற்பட்டது. இதனால் ஷாருக் கான் தரப்பு அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாகிவிட்டது.
பங்களா அமைந்துள்ள நிலத்தின் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்பட வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாகப் பங்களாவின் மதிப்பைக் கொண்டு ஷாருக் கான் செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிட்டுள்ளனர். இதன் காரணமாக ஷாருக் கான் அதிக தொகையைச் செலுத்த வேண்டி இருந்தது. அந்த தவறு இப்போது கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஷாருக் கானுக்கு இப்போது ரூ.9 கோடி திருப்பித் தரப்படுகிறது.
ஷாருக் கான்:
முதலில் ஷாருக் கான் தரப்பு மன்னத் குடியிருப்பைக் குத்தகைக்கு எடுத்தே தங்கி வந்தது. கடந்த 2019ம் ஆண்டு தான் மன்னத் குடியிருப்பை ஷாருக் கான் மகாராஷ்டிர அரசிடம் இருந்து முழுமையாக வாங்கினார். அதில் தான் பிரீமியம் கணக்கிடப்பட்டதில் பிழையைக் கண்டறிந்த பிறகு, ஷாருக் கான் தரப்பு பணத்தைத் திரும்பப் பெற வருவாய் ஆணையத்திடம் முறையிட்டனர். ஷாருக் கான் தரப்பு புகாரை ஆய்வு செய்த வருவாய் ஆணையரகம் தவறு நடந்ததை உறுதி செய்தது. இதையடுத்து பணத்தைத் திரும்பத் தரும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications