என்னய்யா சமையல் இது? கேன்டீன் காண்ட்ராக்டர் முகத்தில் குத்து விட்ட எம்எல்ஏ.. கொடூர அட்டாக்
மும்பை: சமையல் சரியில்லை எனக்கூறி எம்எல்ஏ ஹவுசின் காண்ட்ராக்டர் முகத்தில் சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்குத்து விட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி உள்ளது. சிவசேனா கட்சியில் புல்தானா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சஞ்சய் கெய்க்வாட்.

இவர் 2 வது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார். மும்பையில் எம்எல்ஏக்கள் தங்குவதற்காக ‛ஆகாஸ்வானி' என்ற இல்லம் உள்ளது. எம்எல்ஏக்கள் இங்கு தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ இல்லத்தில் தங்கினார். இந்த இல்லத்தின் தரைதளத்தில் கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ உணவு ஆர்டர் செய்தார். அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவு சுவையாக இல்லை. தரம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் டென்ஷனான சஞ்சய் கெய்க்வாட் பனியன், காவி வேஷ்டி அணிந்து கொண்டு உடலில் துண்டு சுற்றி கொண்டு கேன்டீனுக்கு சென்றார். அப்போது பருப்பு பாக்கெட்டை காண்பித்து தரம் குறைவானதாக உள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவருக்கும் கேன்டீன் காண்ட்ராக்டருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
பருப்பு பாக்கெட்டை எடுத்து காண்ட்ராக்டரின் முகத்தின் முன்பு நீட்டி ஸ்மெல் பண்ணும்படி கூறினார். அதன்பிறகு அடுத்த நொடியில்எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், காண்ட்ராக்டரின் கன்னத்தில் பளார் பளார் என 2 அறை கொடுத்தார். மேலும் முகத்தில் ஒரு குத்துவிட்டார். இதில் நிலைக்குலைந்து போன காண்ட்ராக்டர் தரையில் விழுந்தார். மீண்டும் அவர் எழுந்தபோதும் ஆத்திரம் அடங்காத எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீண்டும் மீண்டும் தாக்கினார். காண்ட்ராக்டர் அங்கிருந்து வெளியேறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அங்கிருந்தவர்கள் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டை சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே கேன்டீனில் காண்ட்ராக்டரை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் குத்தியது, தாக்கியதை அங்கிருந்தவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதுபற்றி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டிடம் கேட்டபோது, ‛‛நான் என் ஸ்டைலில் அவருக்கு பாடம் கற்பித்தேன். ஏற்கனவே 3 முறை உணவு தரமில்லை என்று புகார் அளித்து இருந்தேன். இந்த முறை உணவு என்பது மிகவும் மோசமாக இருந்தது. இதனை என்னால் ஏற்க முடியவில்லை'' என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications