பாஜக ஏஜென்ட்டாக தேர்தல் ஆணையம்.. உத்தவ் தாக்கரே அணி ஒரேபோடு.. பறிபோன சிவசேனா கட்சி- சின்னம்!கோபம்
உண்மையான சிவசேனா என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான் எனவும், அவரது அணியே சிவசேனா கட்சி பெயர், வில் அம்பு சின்னத்தை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தால் சிவசேனாவில் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதோடு சிவசேனா கட்சியின் பெயர், வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் தான், ‛‛நாங்கள் சந்தேகப்பட்டது உண்மையாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறது'' என உத்தவ் தாக்கரே அணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த 2019 தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா வெளியேறியது. மேலும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் அமைந்த இந்த கூட்டணி ஆட்சிக்கு 169 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டு ஆட்சி நடந்தது.

முதல்வரான ஏக்நாத் ஷிண்டே
இந்நிலையில் தான் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். மேலும் கூட்டணி ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றனர். மேலும் ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாஜகவுடன் கைகோர்த்து புதிதாக ஆட்சியை பிடித்தனர். ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். பாஜகவின் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

முடங்கிய சின்னம்
அதன்பிறகு உண்மையான சிவசேனா நாங்கள் தான் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. இதையடுத்து அந்த கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.

உத்தவ் தாக்கரேவுக்கு ஷாக்
இதில் விசாரணை நடந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் உண்மையான சிவசேனா என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான் என அங்கீகரித்தது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பெரிய வெற்றியாகும். மாறாக உத்தவ் தாக்கரே தரப்புக்கும் கடும் அதிர்ச்சியை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் ஏஜென்ட்
இந்நிலையில் தான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உத்தவ் தாக்கரே தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. இதுபற்றி உத்தவ் தாக்கரே அணியின் செய்தி தொடர்பாளரான ஆனந்த் துபே பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி ஆனந்த் துபே கூறுகையில், ‛‛நாங்கள் சந்தேகப்பட்டது உண்மையாகி போய் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறி வந்தோம். சிவசேனா தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் இன்னும் எந்த தீர்ப்போ அல்லது இறுதி முடிவோ எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் அவசரம் காட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மத்திய பாஜக அரசின் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை காட்டி உள்ளது. இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்'' என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications