சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் உள்ளனர்: சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ரானா
மும்பை: சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ரவி ரானா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவி ரானா கூறியதாவது:
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றதற்கு காரணமே பாஜகவுடனான கூட்டணிதான். இல்லையெனில் 25 இடங்களில்தான் அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கும்.

தற்போதும் சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் என்னுடனும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடனும் தொடர்பில் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் அமருவது என சிவசேனா முடிவெடுத்துவிட்டால் அந்த 25 எம்.எல்.ஏக்களும் பட்னாவிஸ் தலைமையிலான அரசில் இணைவார்கள்.
வாக்காளர்கள் தெளிவான தீர்ப்பை தந்தும் சிவசேனாதான் முட்டுக்கட்டை போடுகிறது. இது மகாராஷ்டிரா மக்களை அவமதிப்பதாகும். மகாராஷ்டிரா முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்ற பின்னர் ஓரிரு மாதங்களில் சிவசேனாவின் 20 முதல் 25 எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம்தான் வருவார்கள்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உத்தவ் தாக்கரேதான். ஆகையால் அவர்தான் எந்த விவகாரத்தையும் பேச வேண்டும்.. சஞ்சய் ராவத் பேசக் கூடாது. இவ்வாறு ரவி ரானா கூறினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications