மகாராஷ்டிராவில் இந்த 5 வாய்ப்புகளில் ஒன்றுதான் நடக்கப் போகிறது... சஞ்சய் ராவத் ஆரூடம்
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக- சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் என்னதான் அடுத்து நடக்கும் என 5 வாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை:

சட்டசபை தேர்தல் முடிந்த உடனே சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேவை பெரிய மனதுடன் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே சிவசேனாவுடன் புதிய ஆட்சி குறித்து பேசியிருக்க வேண்டும்.
பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் . ஆனால் பாஜகவின் பிடிவாதத்தால் தேர் இப்போது சகதியில் சிக்கியிருக்கிறது. இந்த தேரை சகதியில் இருந்து மீட்பதற்கு அமித்ஷா தலையிடாமல் இருப்பதும் புதிராக இருக்கிறது.
இனி மகாராஷ்டிராவில் என்னதான் நடக்கும்?
- சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சி அமைக்கலாம். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையை நிரூபிக்க 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அக்கட்சிக்கு தேவைப்படும்.
- 2014-ல் தேசியவாத காங்கிரஸ் பாஜகவை ஆதரித்ததைப் போன்ற ஒரு நிலைமை ஏற்படலாம். அப்போது மத்தியில் மகள் சுப்ரியா சூலேவுக்கும் மாநிலத்தில் அஜித் பவாருக்கும் பதவிகள் திரும்ப கொடுக்கப்படலாம். ஆனால் 2014-ல் தாம் செய்தது தவறு என சரத்பவார் கூறியிருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை.
- சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரலாம். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டதால் அரசை நடத்த முடியும். மூன்று வெவ்வேறான கட்சிகள் ஆட்சி அமைப்பதால் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் உருவாக்கப்படும்.
- பாஜகவும் சிவசேனாவும் தங்களது நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி புதிய ஆட்சியை அமைக்கலாம். இதுதான் மிகச் சரியான வாய்ப்பு. ஆனால் பிடிவாதங்களால் இது சாத்தியமில்லை.
- மத்திய ஏஜென்சிகள் மூலம் கட்சிகளை உடைக்க பாஜக முயற்சிக்கலாம். ஆனால் பிரதமர் மோடியின் இமேஜை இது பாதிக்கும் என பாஜக கருதலாம்.
இவ்வாறு சஞ்சய் ராவத் எழுதியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications