மும்பை விமான நிலையத்தில் அதானி பெயர் பலகை.. அடித்து நொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்.. வைரல் வீடியோ
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில், வைக்கப்பட்டிருந்த அதானி பெயர்ப் பலகையை சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
நாட்டிலுள்ள பல முக்கிய விமான நிலையங்களை ஜி.வி.கே., நிர்வகித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் உள்ளீட்டு வரி தொடர்பான விஷயத்தில் ஜி.வி.கே., குழுமம் முறையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த மாதம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அதானி குழுமத்திற்கு வந்தது. மேலும், விமான நிலையத்தின் சில இடங்களில் அதானி பெயர்ப் பலகைகளும் வைக்கப்பட்டன.
இருப்பினும், இந்த முடிவுக்கு ஆளும் சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மும்பை விமான நிலையத்தில் திரண்ட சிவசேனா கட்சியினர் அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Shivsena breaking Adani board at the airport. pic.twitter.com/guXE1mdVJD
— Shenaz (@WeThePeople3009) August 2, 2021


Click it and Unblock the Notifications
