மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக கூட்டணியை தொடருமா சிவசேனா... இன்று அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவை வெல்வோம்..உத்தவ் தாக்கரே

    மும்பை: பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது குறித்து சிவசேனா இன்று அவசர ஆலோசனை நடத்துவதால் மஹாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் அதனை பங்கிட்டு கொள்வதில் பாஜக-சிவசேனா இடையே தொடர்ந்து இழுபறி இருந்து வருகிறது. பாஜக 144 இடங்களிலும் சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடும் என தகவல்கள் தெரிவித்த நிலையில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது சிவசேனா தலைமை.

    shivsena calls urgent executives meeting in mumbai

    எம்.பி.க்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் என அனைவரையும் அழைத்துள்ள உத்தவ் தாக்கரே, பாஜகவுடன் கூட்டணியை தொடர்வது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பிருக்கிறது. துணை முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க பாஜக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    நகராட்சி ஆணையரிடம் கட்சி நிதி கேட்ட நெல்லை திமுக நிர்வாகி...!நகராட்சி ஆணையரிடம் கட்சி நிதி கேட்ட நெல்லை திமுக நிர்வாகி...!

    சிவசேனா-பாஜக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவசரக் கூட்டத்தை கூட்டி அடுத்த டுவிஸ்ட் வைத்துள்ளார் உத்தவ் தாக்கரே. இன்னும் பாஜக தொகுதி பங்கீட்டையே முடிக்காத நிலையில், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பணிகளை தொடங்கி பிரச்சாரம் வரை சென்றுவிட்டது.

    English summary
    shivsena calls urgent executives meeting in mumbai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X