மழை நீர் தேங்கிய சாலையில் கான்ட்ராக்டரை உட்கார வைத்து குப்பையை கொட்டி எம்எல்ஏ தண்டனை
மும்பை: மும்பையில் மழை நீர் தேங்கிய சாலையில் அதை அமைத்த ஒப்பந்ததாரரை உட்கார வைத்து சிவசேனா எம்எல்ஏ திலிப் லாண்டே தண்டனை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஆரோக்கியம்
மும்பையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை நீர் வடியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் தேங்கிய நீரில் கால் வைத்து வெளியே செல்வது அத்தனை ஆரோக்கியமானது இல்லை என்பதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

மழைநீர்
இந்த நிலையில் சண்டிவால் தொகுதியின் சிவசேனா எம்எல்ஏ திலிப் லாண்டே மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தனர். மேலும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதையும் அவர் பார்வையிட்டார்.

சுத்தம்
அப்போதுதான் மழைநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியின் துப்புரவு காண்ட்ராக்டரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அப்போது அவரிடம் குப்பைகள் தேங்கியதை சுட்டிக் காட்டினார் எம்எல்ஏ.

தண்டனை
மேலும் குப்பைகளை அகற்றாததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டிய எம்எல்ஏ அந்த கான்ட்ராக்டரை கண்டித்தார். பின்னர் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் அவரை அமர வைத்தார். உடனடியாக குப்பைகளை அள்ளி அந்த கான்ட்ராக்டர் மீது கொட்டுமாறு பணியாளர்களிடம் கூறினார்.

பரபரப்பு
கான்ட்ராக்டர் தனது வேலையை ஒழுங்காக செய்யாததால்தான் நான் இவ்வாறு செய்தேன் என்றார் திலிப் லாண்டே. காண்ட்ராக்டரை சாலையில் அமர வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications