32 வயது பெண்ணை கொன்று.. விடிய விடிய சடலத்துடன் உறவு.. மும்பையில் பயங்கரம்

பெண்ணை கொன்று உடலுறவு கொண்டுள்ளார் ஒரு பொம்மை கடைக்காரர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: "பொம்மை விலையை குறைச்சு குடுங்கன்னு"தான் கேட்டார் அந்த பெண்.. இதனால் அந்த பொம்மைக்கடைக்காரருக்கு ஆத்திரம் வந்து, அந்த பெண்ணை கொன்று.. சடலத்துடன் உடலுறவும் கொண்டுள்ளார்... மும்பையில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் மொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது

மும்பை நாலசோபராவில் ஒருவர் பொம்மை கடை வைத்திருக்கிறார்.. கடந்த 26-ம் தேதி இரவு, ஒரு பெண் தன் குழந்தைக்காக பொம்மை வாங்க, இந்த கடைக்கு சென்றார்.. அந்த பெண்ணுக்கு 32 வயது.

 shopkeeper murders woman customer, has sex with corpse in mumbai

கடைக்காரரிடம் பொம்மை விலை கேட்டதும், அதிகமாக சொன்னார்.. அதனால் பேரம் பேசியுள்ளார்.. இது 2 பேருக்கும் வாக்குவாதம் வரை வந்துவிட்டது... பொம்மைக்கடைக்காரருக்கு கோபம் அதிகமாகி, அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரதரவென கடைக்கு பின்பக்கம் இழுத்து சென்று, கழுத்தையும் நெரித்தார்.

இதில் அந்த பெண்ணுக்கு அங்கேயே உயிர் போய்விட்டது.. பிறகு அந்த பெண்ணின் சடலத்துடன் இரவெல்லாம் விடிய விடிய உறவு கொண்டுள்ளார்.. கடைசியாக, அந்த சடலத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி எடுத்து கொண்டு, அதே பகுதியில் நின்றிருந்த ஒரு வேனில் வீசிவிட்டு வந்துவிட்டார்.

இதனிடையே பொம்மை வாங்க கடைக்கு போன மனைவியை காணாமல், பெண்ணின் கணவர் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் பல இடங்களில் பெண்ணை தேடிவந்தனர்.. 2 நாள் கழித்து, அதாவது ஜுன் 28ம் தேதிதான் சடலத்தை கண்டுபிடித்தனர்.. இதற்கு காரணம் அந்த வேன்தான்.

அந்த வேன் ரிப்பேர் ஆகி, ரொம்ப நாளாகவே அங்கு நின்றுள்ளது.. பராமரிப்பும் இல்லை.. அதனால்தான் சந்தேகம் அதிகமாக வேனுக்குள் பார்த்தனர்.. பிறகு பெண்ணின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அப்போதுதான் கழுத்து நெரிப்பட்டதும், உடலுறவு கொண்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது.

பிறகு அந்த பகுதியில் இருந்த எல்லா பொம்மை கடைகளிலும் விசாரணை ஆரம்பமானது.. இறுதியில் சம்பந்தப்பட்டவர் சிக்கி கொண்டார்.. போலீசாரிடம் வாக்குமூலமும் தந்துள்ளார்.. இப்போது அவரை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+