ஏய் எப்புட்றா.. வெறும் 5 வருடம்.. பொட்டல் காட்டை பூஞ்சோலையாக மாற்றிய அண்ணன் தங்கை.. ப்பா செம மாற்றம்
இவர்கள் வசிக்கும் பகுதியில் மழைப்பொழிவு ஆண்டுக்கு 513 மிமீ மட்டும்தான். ஆனால், இதற்கு அருகில் உள்ள மற்றொரு பகுதியில் ஆண்டுக்கு 5,800 மிமீ எனும் அளவில் மழை பொழிகிறது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் இருவர் ஒன்று சேர்ந்து பொட்டல் காடாக இருந்த பகுதியில் சுமார் 9,500 மரங்களை நட்டு அப்பகுதியை 5 ஆண்டுகளில் மழைக்காடுகளாக மாற்றியுள்ளனர். இவர்களின் முயற்சிக்கு மாநில அரசு 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் வனஸ்ரீ புரஸ்கார் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையானது காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நிகழ்காலத்திலேயே பிரதிபலிக்க தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், பிரிட்டனில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை ஆகியவை இதன் விளைவுகளாக ஏற்பட்டதுதான் என சூழலியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சூழல் இவ்வாறு இருக்கையில், மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் அதிகரித்துள்ளன.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அண்ணன் தங்கை இருவர் புல்லை தவிர எதுவுமே முளைக்காத பகுதியை அடர் காடுகளாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தின் மன் மற்றும் கடாவ் பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதிகளாகும். இங்குள்ள நிலங்கள் உழப்படாமல் தரிசுகளாகவே இருக்கிறது. மற்றொருபுறம் கால்நடைகள் அரசின் உதவியால் ஓரளவு உயிர்பிழைத்திருக்கின்றன.

மழை பொழிவு
இந்த ஊரின் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும், வானம் எப்போதும் இவர்களுக்கு ஏமாற்றத்தைதான் கொடுத்து வருகிறது. இப்பகுதியில் ஆண்டுக்கு 513 மிமீ மட்டுமே மழை பொழிகிறது. இதனால் மான் தெஹ்சிலில் உள்ள மங்கங்கா ஆற்றில் ஆண்டுக்கு 4-5 நாட்கள் மட்டும் தண்ணீர் ஓடும். இப்படியான பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் கல்லூரி மாணவன் ரேஹித் மற்றும் அவரது தங்கை பள்ளி மாணவியான ரக்ஷிதா. இவர்களுக்கு தங்கள் கிராமத்தின் நிலையை பார்க்க சகிக்கவில்லை. இவர்கள் கிராமத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள மஹாபலேஷ்வர் தாலுகாவில் ஆண்டுக்கு 5,800 மிமீ அளவில் மழை பொழிவு இருக்கிறது.

மரங்கள்
ஆனால் தங்களது கிராமம் மட்டும் ஏன் இப்படி வறுமையிலும், வறட்சியிலும் இருக்கிறது என்று முதலில் ரோஹித்துக்கு புரியவில்லை. இதற்கான விளக்கத்தை பள்ளியில் படித்த பாடங்கள்தான் கொடுத்துள்ளன. அதாவது மரங்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பொழிவு இருக்கும் என்பதை உணர்ந்த ரோஹித் தனது தங்கையுடன் மரம் நடும் பணியை தொடங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தினர் தண்ணீர் எடுப்பதற்காக பல கி.மீ தூரம் வெறும் கால்களுடன் நடக்கின்றனர். என்னால் இதனை முதலில் புரிந்துக்கொள்ள முடியவில்லை. பின்னர் பாட புத்தகங்கள் இதற்கான விளக்கத்தை எனக்கு கொடுத்தது.

5 ஆண்டுகள்
நானும் எனது தங்கையும் சேர்ந்து மரங்களை நட தொடங்கினோம். சுமார் 5 ஆண்டுகள் நாங்கள் இந்த பணியை தொடங்கினோம். இது நாங்கள் எதிர்பார்த்ததைப் போல பலனை கொடுத்தது. மலை சரிவில் குறிப்பிட்ட இடங்களில் பள்ளத்தை தோண்டினோம். அங்கு நாட்டு மரங்களை நட்டோம். பின்னர் அருகிலிருந்த கற்களை கொண்டு ஒரு தடுப்பை உருவாக்கினோம். அடுத்த சில நாட்களில் பருவமழை தொடங்கியது. அதன் பின்னர் ஒரு சில நாட்களில் நாங்கள் நட்டு வைத்த மரங்கள் துளிர்விட்டு முளைக்க தொடங்கிவிட்டன. மழை நீர் போதுமான அளவுக்கு கிடைத்துவிட்டது. இது நாங்கள் சரியான பாதையில்தான் சென்றுக்கொண்ருக்கிறோம் என்பதை உறுதி செய்தது.

பாராட்டு
இவர்களின் முயற்சி குறித்து மான் ரேஞ்ச் வன அலுவலர் பாக்யஸ்ரீ தாக்கூர் கூறுகையில், "இவர்கள் இருவரும் மிக முக்கியமான பணியை செய்து வருகின்றனர். இவர்களின் முயற்சியால் புதிய காடுகள் உருவாகியுள்ளன. காட்டு நரிகள் இந்த பகுதியை தங்கள் இருப்பிடமாக மாற்றிக்கொண்டுள்ளன. ஏராளமான பறவை இனங்களை இங்கு காண முடிகிறது. எங்களுடன் சேர்ந்து சுமார் 55 ஹெக்டேருக்கு மேல் ரோஹித் மரங்களை நட்டு வைத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications